வரும் ஞாயிறு விடுமுறை இல்லை.! இரவு 8 மணி வரை வங்கி திறக்க உத்தரவு.!! அதிரடி அறிவிப்பு.!!! - Seithipunal
Seithipunal


வரும் சனி மற்றும் ஞாயிறு வங்கி செயல்படும் என்றும் இரவு 8 மணி வரை திறந்து இருக்கவும் அணைத்து வங்கிகளுக்கும் ரிசர்வ் வங்கி உத்தரவு பிறப்பித்துள்ளது/

வருகிற மார்ச் 31 ஆம் தேதி 2018 - 2019 நிதியாண்டு முடிவடைகிறது, அன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால், அன்றைய தினம் வங்கிகள் அனைத்தும் இயங்கும் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

வரும் ஞாயிறு அன்று 2018 - 2019 நிதியாண்டு முடிவடைவதையொட்டி, அன்று நாட்டில் உள்ள அனைத்து நிறுவனங்களும் தங்களது ஆண்டு வரவு செலவு கணக்கை முடிக்கும். ஆனால், வரும் மார்ச் 31 ஞாயிற்றுக்கிழமை என்பதால், அன்று வங்கிகள் இயங்காமல் இருந்தால் அது அரசுக்கும், நிறுவனங்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும்.

இதன் காரணமாக வரும் மார்ச் 31 ஆம் தேதி அன்று அனைத்து வங்கிகளும் வழக்கம்போல் இயங்க வேண்டும் என்றும், மார்ச் 30 மற்றும் மார்ச் 31 ஆகிய தேதிகளில் ஆன்லைன் பணபரிவார்த்தனையும் செய்யலாம் என்றும் ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

மேலும், வருகிற மார்ச் 30 ஆம் தேதி இரவு 8 மணி வரையிலும், மார்ச் 31 அன்று மாலை 6 மணி வரையிலும் வங்கிகளில் கவுண்டர்கள் திறந்திருக்க வேண்டும் என்றும் வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி அறிவுறுத்தியுள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

NO HOLIDAY COMING SUNDAY


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->