கைது செய்யப்பட்ட மோடி!! அமலாக்கத்துறை எடுத்த அதிரடி நடவடிக்கையினால் பரபரப்பு!!  - Seithipunal
Seithipunal


இந்தியாவில் பஞ்சாப் நே‌ஷனல் வங்கியில் ரூ.13,000 கோடிக்கு மேல் கடன் பெற்று மோசடி செய்துவிட்டு, குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த பிரபல வைர வியாபாரி நிரவ் மோடியும், அவருடைய நெருங்கிய உறவினரான மெகுல் சோக்‌ஷியும் வெளிநாட்டுக்கு தப்பி விட்டதாக தகவல்கள் வெளியாகின.

தற்பொழுது, இது தொடர்பாக இந்திய சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத்துறை அவர்களின் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. நீரவ் மோடியை இந்தியாவுக்கு கொண்டு வர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.

இந்நிலையில், அவர் எந்த நாட்டில் இருக்கிறார் என சில தகவல்கள் தற்பொழுது வெளியாகி வருகின்றது. அவர் பிரிட்டனுக்கு தப்பிச் சென்றுஅங்குள்ள அரசியல்வாதிகளிடம் அடைக்கலம் கேட்டிருப்பதாகவும் சில தகவல்கள் வருக்கின்றன. 

பினான்சியல் டைம்ஸ் இந்தியா மற்றும் பிரிட்டன் அதிகாரிகளின் கருத்தை சுட்டிக்காட்டி இந்த செய்தியை வெளியிட்டிருந்தது. ஆனால், லண்டனின் மேற்கு கரையில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் நிரவ் மோடி சொகுசாக வாழ்ந்து வருவதாக பிரிட்டன் நாளிதழ் ஒரு செய்தியை வெளியிட்டது.

நிரவ் மோடி 3 படுக்கையறை கொண்ட ஒரு வீட்டில் தங்கியிருப்பதாகவும், அவர் அங்கிருந்தபடி புதிதாக வைர விற்பனை தொழிலில் ஈடுபட்டு வருவதாகவும் அதில் தெரிவிக்கின்றது. 

மேலும், நிரவ் மோடி செய்தியாளர்களிடம் பேசும் வீடியோவும் அதனுடன் வெளியிடப்பட்டுள்ளது. இந்த தகவல்கள் அதிகாரிகள் சட்டவிரோதமாக மகாராஷ்டிர மாநிலம் கிஹிம் கடற்கரையில் கட்டப்பட்டு இருந்த அவரின் பங்களாவை வெடிவைத்து தகர்த்த மறுநாள் வெளியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.              

தற்பொழுது, இதனை தொடர்ந்து அவரை இந்தியாவிற்கு நாடு கடத்த, சட்ட நடைமுறை விரைவில் தொடங்க உள்ளது. தப்பி ஓடிய நிரவ் மோடி பிரிட்டனில் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து நிரவ் மோடியை லண்டன் போலீசார் இன்று கைது செய்தனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Nirav modi arrested by police


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->