நீட் தேர்வில் கருணை மதிப்பெண் வழங்கியதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் ..! உச்ச நீதிமன்றம் முக்கிய அறிவிப்பு..!! - Seithipunal
Seithipunal


தமிழ் வழியில் நீட் தேர்வு எழுதிய மாணவர்களுக்காக தயாரிக்கப்பட்ட வினாத்தாள்களில் 49 கேள்விகள் தவறாக மொழிபெயர்க்கப்பட்டிருந்தது. இது குறித்து மாநிலங்களவை எம்.பியான டி.கே.ரங்கராஜன் தாக்கல் மதுரை உயர் நீதிமன்ற கிளையில்  மனு ஒன்றை தாக்கல் செய்து இருந்தார்.

அதில் தவறாக கேட்கபட்டிருந்த 49 வினாக்களுக்கு தலா 4 மதிப்பெண்கள் வீதம் 196 மதிப்பெண்ககளை  தமிழில் எழுதிய மாணவர்களுக்கு வழங்க வேண்டி சிபிஎஸ்இ, முதல்வர் தனிப்பிரிவு, பிரதமர் மற்றும் அதிகாரிகள் வரை புகார் அளித்தும் பரிசீலனை செய்யப்படவில்லை என அந்த மனுவில் தெரிவித்து இருந்தார்.

இந்த வழக்கு விசாரித்த மதுரை உயர்நீதிமன்றம் 196 மதிப்பெண் வழங்க சிபிஎஸ்இக்கு நீதிபதி உத்திரவிட்டு இருந்தார். 

இந்நிலையில் உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவுக்கு தடை கோரி உச்சநீதிமன்றத்தில் சிபிஎஸ்இ  நேற்று மேற்முறையிடு செய்தது. இதற்கான மனுவை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் வரும் 20 தேதி விசாரணை நடத்தப்படும் என தெரிவித்தனர். 

இதையடுத்து நீட் தேர்வில் கருணை மதிப்பெண் வழங்கியதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு வரும் 20 ஆம் தேதி உச்சநீதிமன்றத்தில் விசாரணை வரும் என தெரிகிறது. 
 
ஏற்கனவே இந்த வழக்கில் உச்ச நீதிமன்றத்தில் டி.கே ரங்கராஜன் கேவியட் மனு தாக்கல் செய்துள்ளார். சிபிஎஸ்இ மேல்முறையீடு செய்தால் தங்கள் கருத்தையும் கேட்க வேண்டும் என்று டி.கே ரங்கராஜன் மனுவில் கோரியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Neet Exam Grace Mark Case In Supreme Court


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->