குறுகிய சாலைகளில் காவல் துறையினர் கண்காணிப்பு மேற்கொள்ள அதிரடி திட்டம்.! கதறும் குற்றவாளிகள்.!! - Seithipunal
Seithipunal


மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள மும்பையில் இருக்கும் குடிசை பகுதிகள் மற்றும் குறுகிய வீதிகளில் காவல் துறையினர் கண்காணிப்பு பணி மேற்கொள்ளும் சமயத்தில் அவர்களுக்கு., குறுகிய சாலைகளில் கண்காணிப்பு பணி மேற்கொள்வது பெரும் பிரச்சனையாக உள்ளது. 

இதனால் மும்பை நகரில் பணியாற்றும் பணியாளர்களுக்கு பேட்டரியின் சக்தியால் இயங்கும் மிதிவண்டிகளானது வழங்கப்படவுள்ளது. இந்த மிதிவண்டிகள் மூலமாக தொடர்ந்து சுமார் 25 கி.மீ முதல் 30 கி.மீ வரை தூரமும்., 3 மணி நேரமும் பயன்படுத்தலாம். பின்னர் சுமார் ஒரு மணிநேரம் பேட்டரியில் ஜார்ஜ் ஏறியவுடன் மீண்டும் பயன்படுத்தலாம். 

இது குறித்து காவல் துறை அதிகாரி தெரிவித்ததாவது., காவல் துறை அதிகாரிகள் கண்காணிப்பு பணி மேற்கொள்ளும் சமயத்தில் சாதாரண மிதிவண்டிகளில் செல்ல முடியும். அவசர காலகட்டங்களில் பேட்டரியை உபயோகம் செய்வதன் மூலமாக தப்பியோடும் குற்றவாளிகளை எளிதில் பிடிக்க இயலும். 

இதன் மூலமாக காவல் துறையினரின் கண்காணிப்பு வாகனங்கள் செல்ல முடியாத இடங்களில் செல்ல முடியும் என்பதால்., தப்பியோடும் குற்றவாளிகளை எளிதில் கைது செய்ய இயலும். இதன் மூலம் சுமார் 25 கி.மீ வேகத்தில் பயணம் செய்ய இயலும். மேலும்., பேட்டரி சக்தியுடன் நமது திறனையும் உபயோகம் செய்தால் அதிவேகத்தில் சென்று குற்றவாளிகளை கைது செய்யலாம். 

இதன் மூலமாக காவல் துறை அதிகாரிகளின் உடல் நலமும் பாதுகாக்கப்படும் என்று தெரிவித்தார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Mumbai police to plan arrest thief and control theft by police when using battery cycle


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->