மருத்துவமனையில் கொடூரமாக நடந்த விபத்து.! 116 பேர் உயிருக்கு போராட்டம்.!! 10 பேர் பரிதாப பலி.!! - Seithipunal
Seithipunal


 

மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் உள்ள அந்தேரியில் மத்திய அரசிற்கு சொந்தமான மருத்துவமனை 5 மாடி கட்டிடத்தில் இயங்கி வருகிறது. இந்த மருத்துவமனையில் உள்ள நான்காவது மாடியில் ஏற்பட்ட திடீர் தீ விபத்து ஏற்பட்டது. 

இந்த தீவிபத்தானது சிறிது நேரத்தில் மளமளவென எரியத் தொடங்கியதன் காரணமாக நான்காவது தளம் முழுவதும் பரவியதன் காரணமாக அந்த தளத்தில் இருந்து கரும்புகை பரவ துவங்கியது. மேலும்., இந்த தீவிபத்தை அறிந்த மருத்துவர்கள்., ஊழியர்கள் மற்றும் நோயாளிகள் பதறியபடி உயிரை கையில் பிடித்துக்கொண்டு ஓட்டம் பிடித்தனர். 

உடல் நலம் சரியில்லாமல் கடுமையான நிலையில் அனுமதி செய்யப்பட்டிருந்த நோயாளிகள் அனைவரும் படுகைகளில் இருந்து எழுந்திருக்க இயலாமல்., காப்பாற்ற கூறி கூச்சலிட்டனர். மேலும்., அங்கிருந்த பலருக்கு மூச்சு திணறல் ஏற்பட்டது. இதன் காரணமாக பல நோயாளிகள் தப்பிக்க வழியின்றி பரிதாபக உயிருக்கு போராடி துடித்தனர். 

இந்த சம்பவம் குறித்து உடனடியாக தீயணைப்பு மற்றும் மீட்பு படையினருக்கும்., காவல் துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலை அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு துறையினர் தீயை கட்டுக்குள் கொண்டு வருவதற்காக பெருமளவு சிரமமடைந்தனர். சுமார் 12 தீயணைப்பு வாகனங்கள் தீயை கட்டுக்குள் கொண்டு வர மிகுந்த சிரமப்பட்டது.    

சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர் ஒரு புறம் தீயை கட்டுக்குள் கொண்டு வர போராடிக்கொண்டு இருந்த நிலையில்., மருத்துவமனையில் உயிருக்கு போராடியவர்களை மீட்பதற்க்காக அதிகாரிகள் விரைந்தனர். மருத்துவமனையில் இருந்த பலருக்கு தீக்காயமும்., பலர் மூச்சு திணறலின் காரணமாக பலர் மயங்கிய நிலையில் இருந்ததை கண்டு அவர்களை உடனடியாக மீட்டனர். 

தீவிபத்தில் பாதிப்படைந்த அனைவரையும் அவசர ஊர்தியின் மூலமாக அங்கிருந்த மருத்துவமனையில் அனுமதித்தனர். மேலும்., மயக்க நிலையில் இருந்தவர்களை மருத்துவர்கள் செய்த சோதனையிலும்., தீவிர சிகிச்சை பெற்று வந்த நிலையிலும் மொத்தம் 10 பேர் தற்போது வரை பரிதாபமாக உயிரிழந்தனர்.  

மேலும் இந்த விபத்தில் மருத்துவமனையில் இருந்த நோயாளிகள் மூச்சு திணறலால் பாதிக்கப்பட்டவர்களில் சுமார் 175 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில்., 116 நபர்கள் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வரும் காரணத்தால் மேலும் உயிர் பலி அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

mumbai hospital fire accident


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->