முகேஷ் அம்பானியின் மகள் திருமணம்.!! செலவு இத்தனை கோடியை மிஞ்சுமாம்.!! - Seithipunal
Seithipunal


 

உலக புகழ்பெற்ற கோடிஸ்வரர்களில் ஒருவரான முகேஷ் அம்பானியின் மகளான இஷா அம்பானிக்கும்., ரியல் எஸ்டேட் அதிபரான அஜய் பிரமாலின் மகனான ஆனந்த் 
பிரமாலுக்கும் நேற்று மும்பையில் திருமணம் நடைபெற்றது. 

இந்த திருமண விழாவிற்கு முகேஷ் அம்பானியின் 27 மாடியை கொண்ட ‘அன்டிலா’ இல்லமானது வண்ண விளக்குகளாலும்., மலர் அலங்காரத்தாலும் ஜொலித்தது. மேலும்., பங்களாவிற்கு வருகை தரும் வீதிகள் அனைத்தும் தோரணங்கள் கட்டப்பட்டு ஆடம்பரத்துடன் களைகட்டி இருந்தன.

அந்த வகையில்., ஒரு திருமண பத்திரிக்கைக்கே ரூ.3 இலட்சம் செலவு செய்து இருந்த நிலையில்., மொத்த செலவுகள் ரூ.722 கோடியை தூண்டலாம் என்று கூறப்படுகிறது. 

இந்த திருமண விழாவிற்கு முன்னாள் ஜனாதிபதி முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, மகாராஷ்டிரா முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ், முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், நடிகர் ரஜினிகாந்த் மற்றும் அவரது மனைவி லதா ரஜினிகாந்த், முகேஷ் அம்பானியின் சகோதரர் அனில் அம்பானி, இந்தி நடிகர்களான அமிதாப் பச்சன், அமீர் கான் மற்றும் ஐஸ்வர்யாராய், கிரிக்கெட் வீரர்கள் சச்சின் தெண்டுல்கர் மற்றும் ஹர்பஜன் சிங் ஆகியோர் மற்றும் மேலும் பல பிரபலங்கள் கலந்து கொண்டனர். இதன் காரணமாக மும்பையே நேற்று பரபரப்பாக காணப்பட்டது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

MUKESH AMBANI DAUGHTER MARRIAGE


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->