மிரட்டலான பேட்டரியுடன் களமிறங்கும் புதிய ஸ்மார்ட்போன்!! - Seithipunal
Seithipunal


இந்தியாவில் மோட்டோரோலா நிறுவனம் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட மோட்டோ ஜி7 பவர் ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்துள்ளது. மற்ற ஸ்மார்ட்போன்கள் போல் இல்லாமல், புதிய மோட்டோ ஜி7 பவர் ஸ்மார்ட்போன் ஒரு முறை சார்ஜ் செய்தால் போதும் 60 மணி நேரங்களுக்கு பேட்டரி பேக்கப் வழங்கும் என மோட்டோரோலா தெரிவித்துள்ளது.

இந்த புதிய ஸ்மார்ட்போனில் மோட்டோரோலாவின் டர்போபவர் ஃபாஸ்ட் சார்ஜிங் தொழில்நுட்பம் வழங்கியுள்ளது. மற்ற சிறப்பு அம்சங்களை பொருத்தவரை 6.2 இன்ச் 19:9 பேனல், குவால்காம் ஸ்னாப்டிராகன் 632 சிப்செட் மற்றும் 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி கொண்டிருக்கிறது. 

மோட்டோ ஜி7 சிறப்பம்சங்கள்:

  1. 4 ஜி.பி. ரேம்
  2. 64 ஜி.பி. மெமரி
  3. 5,000 எம்.ஏ.ஹெச். பேட்டரி
  4. 15 வாட் டர்போ சார்ஜிங்
  5. மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
  6. அட்ரினோ 506 GPU
  7. 12 எம்.பி. பிரைமரி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ், f/2.0, 1.25um பிக்சல்
  8. 8 எம்.பி. செல்ஃபி கேமரா, f/2.2, 1.12um பிக்சல்
  9. 6.2 இன்ச் 1570x720 பிக்சல் ஹெச்.டி. பிளஸ் LTPS LCD 19:9 டிஸ்ப்ளே
  10. கார்னிங் கொரில்லா கிளாஸ் 3
  11. 1.8 ஜிகாஹெர்டஸ் ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 632 14 என்.எம். பிராசஸர்
  12. டூயல் சிம் ஸ்லாட்
  13. ஆண்ட்ராய்டு 9.0 பை
  14. வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி
  15. கைரேகை சென்சார்
  16. 3.5 எம்.எம். ஆடியோ ஜாக், டால்பி ஆடியோ ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள்
  17. டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத், யு.எஸ்.பி.டைப்-சி

இந்தியாவில் மோட்டோ ஜி7 பவர் ஸ்மார்ட்போனின் விலை ரூ.13,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. புதிய ஸ்மார்ட்போன் செராமிக் பிளாக் எனும் ஒற்றை நிறத்தில் கிடைக்கிறது. மேலும் புதிய மோட்டோ ஜி7 பவர் ஸ்மார்ட்போன் ப்ளிப்கார்ட் மற்றும் ரீடெயில் விற்பனை மையங்களில் விற்பனை செய்யப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Moto G7 power with 500mAh battery


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->