அன்னை தெரசா விருது பெற்ற பிரபல தமிழ் நடிகர், கொண்டாடும் ரசிகர்கள் .! - Seithipunal
Seithipunal


சிறந்த சமூக சேவகரான அன்னை தெரசாவின் 108வது பிறந்த நாள் விழா சென்னை காமராஜர் அரங்கத்தில் நடைபெற்றது. அன்னை தெரசா டிரஸ்ட் சார்பில் நடந்தப்பட்ட  இந்த விழாவில் நிறுவனர் ஜி.கே.தாஸ் தலைமை தாங்கினார். அன்னை தெரசா பேரவை மாநில தலைவர் டி.வி. பாலகிருஷ்ணன் முன்னிலை வகித்தார். 

மேலும் தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர், பா.ம.க. இளைஞர் அணி தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆகியோர் இவ்விழாவில் சிறப்பு சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர்.

 இதில் சிறந்த சமூக சேவைக்கான விருது திரைப்பட நடிகர் ராகவா லாரன்சுக்கு வழங்கப்பட்டது.

தமிழ் சினிமாவில் ஆரம்ப காலகட்டங்களில்  டான்ஸ் மாஸ்டர் ஆக இருந்து தற்போது முன்னணி நடிகராக இருப்பவர்  நடிகர் ராகவா லாரன்ஸ்.அவர் தற்போது மாற்றுத்திறனாளிகள் உட்பட அனைத்து தரப்பு மக்களுக்கும் தம்மால் முடிந்த அளவுக்கு உதவிகளை செய்து வருகிறார்.இதனால் அன்னை தெரசா பிறந்தநாளை முன்னிட்டு சமூக சேவைக்கான விருது வழங்கப்பட்டு கவுரவிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் இது குறித்து ராகவா லாரன்ஸ் கூறுகையில், ‘ இந்த உலகின் முதல் கடவுளாக நான் எனது தாயை நினைக்கிறேன். சில ஆண்டுகளுக்கு முன்பு  நான் பிரெயின் டியூமர் நோயால் பாதிக்கப்பட்டிருந்தேன்.

அப்போது என் தாய்தான் என்னை  நம்பிக்கையோடு காப்பாற்றினார். அவர் இல்லை என்றால் , நான் இல்லை என்று கூறினார். பிறகு இவ்விருதை என் அம்மாவுக்கு காணிக்கையாக்குகிறேன் எனவும் தெரிவித்துள்ளார். 

   

மேலும் ராயபுரத்தில் இருந்து கோடம்பாக்கத்துக்கு வந்து நானும், எனது 3 சகோதரிகளும் எவ்வளவோ வறுமையை அனுபவித்தோம். பொறுமையாக வளர்ந்து நான் சம்பாதிப்பதை மக்களுக்கு கொடுக்க வேண்டும் என்று நினைத்து கொடுக்கிறேன். மக்கள் திலகத்தின் ‘தர்மம் தலைகாக்கும்’, பாடலையும், மரத்தை வைச்சவன் தண்ணி ஊத்துவான்’ என்ற ரஜினி சார் பாடலையும் மனதில் வைத்துக் கொண்டு உதவி செய்து வருகிறேன் என்று கூறியுள்ளார் 

 நடிகர் ராகவா லாரன்ஸ் தன் அம்மாவுக்காக ஒரு கோயில் காட்டியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

English Summary

mother teresa award giving to ragava lawrence

செய்திகள்Seithipunal