காஷ்மீர் தாக்குதல் : மோடி வெளியிட்ட அறிவிப்பு! பயங்கரவாதிகளுக்கு முடிவுகட்ட ராணுவத்திற்கு கொடுத்த அஸ்திரம்!! - Seithipunal
Seithipunal


காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் மத்திய ரிசர்வ் போலீஸ் படையினர் மீது ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதி நடத்திய கொடூர தாக்குதலில் 41 வீரர்கள் வீரமரணம் அடிந்தனர். இந்த தாக்குதலுக்கு பிரதமர் நரேந்திர மோடி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும், உலகம் முழுவதிலும் இருந்து பல்வேறு தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

பாகிஸ்தான் தூதரை வரவழைத்து இந்திய உள்துறை அமைச்சகம் கண்டனம் தெரிவித்துள்ளது. மேலும், மிகவும் முக்கியத்துவமான நாடு என வர்த்தகத்துக்கான முன்னுரிமையுடன் பாகிஸ்தானுக்கு அளிக்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தை இந்தியா ரத்து செய்துள்ளது.

இந்நிலையில் புல்வாமா தாக்குதலுக்கு பதிலடி கொடுப்பது பற்றி ராணுவ வீரர்கள் முடிவு செய்வார்கள் என்று பிரதமர் மோடி இன்றும் கூறியுள்ளர். மராட்டிய மாநிலம் யவதாமில் நடந்த பொது நிகழ்ச்சியில் அவர் இது தொடர்பாக கூறியவை,

இந்திய பிரிவினைக்கு பிறகு ஒரு நாடு பயங்கரவாதிகளுக்கு புகலிடம் அளித்து வருகிறது, திவாலாகி கொண்டு இருக்கும் அந்த நாடு இன்று பயங்கரவாதத்தின் சின்னமாக உள்ளது.

காஷ்மீர் மாநிலம் புல்வாமா தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகளுக்கு முடிவு கட்டுவது குறித்து ராணுவம் முடிவு செய்யும், பதிலடி கொடுப்பது குறித்து நமது வீரர்கள் முடிவு செய்வார்கள், அவர்களுக்கு முழு சுதந்திரம் கொடுக்கப்பட்டுள்ளது என்று கூறினார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

modi says pulwama attack in full power for army


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->