ஸ்லோவாகியா பிரதமர் மீது திடீர் தாக்குதல்: மோடி கடும் கண்டனம்.! - Seithipunal
Seithipunal


ஸ்லோவாகியா நாட்டில் பிரதமர் ராபர்ட் ஃபிகோ மீது நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டுக்கு பிரதமர் நரேந்திர மோடி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். 

பிரதமர் ராபர்ட் நேற்று நடைபெற்ற அரசாங்கக் கூட்டத்திற்கு பிறகு பொது மக்களுடன் உரையாடிக் கொண்டிருந்தார். அப்போது அடையாளம் தெரியாத நபர்கள் திடீரென துப்பாக்கி சூடு நடத்தியதில் ராபர்ட் படுகாயம் அடைந்தார். 

இதனை அடுத்து ராபர்ட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி கண்டனம் தெரிவித்துள்ளார். 

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், ராபர்ட் ஃபிகோ மீது நடத்தப்பட்ட துப்பாக்கி சூடு சம்பவம் மிகவும் கண்டனத்திற்குரியது. 

இந்த கோழைத்தனமான, கொடூரமான செயலை வன்மையாக கண்டிக்கிறேன். ராபர்ட் விரைவில் உடல் நலம் பெற வாழ்த்துகிறேன். ஸ்லோவாகியா நாட்டு மக்களுக்கு இந்தியா உறுதுணையாக இருக்கும் என தெரிவித்துள்ளார். 

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Modi condemns Slovakian PM attack 


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->