சும்மா தேவையில்லாமல் வாய்க்கு வந்ததை பேசாதீங்க .,மோடி அறிவுரை..! - Seithipunal
Seithipunal


சமீபகாலமாகப் பெண்களுக்கு, குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகள், பாலியல் ரீதியான தாக்குதல்கள் அதிகரித்து வருகின்றன.

மேலும் கடந்த வாரத்தில் காஷ்மீரில் கதுவா மாவட்டத்தில் 8 வயது சிறுமி கூட்டுப்பலாத்காரம் செய்யப்பட்டுக் கொல்லப்பட்டார், அதேபோல உத்தரப்பிரதேச மாநிலம், உன்னாவ் மாவட்டத்தில் பாஜக எம்எல்ஏ உள்ளிட்ட 5 பேரால், சிறுமி ஒருவர் பலாத்காரம் செய்யப்பட்டார்.இதை தொடர்ந்து பல சிறுமிகளுக்கு இந்த அவலநிலை ஏற்பட்டுள்ளது.

          chid abuse க்கான பட முடிவு

இதைக் கண்டித்தும், முறையான நீதி வழங்கக்கோரியும் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.ஆனால், இந்த சம்பவங்களை பற்றி பாஜகவினர் கூறிய கருத்துகள் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.மேலும், பாஜக கட்சியை சேர்ந்த தமிழகத்தில் ஹெச்.ராஜா, எஸ்.வி.சேகர் ஆகியோர் கூறிய கருத்துகளும் சமீபத்தில் சர்ச்சைகளை ஏற்படுத்தியது.

modi க்கான பட முடிவு


இந்நிலையில், நேற்று நமோ செயலி மூலமாக வீடியோ காணொளியில் பாஜக எம்.பி.க்கள் மற்றும் எம்.எல்.ஏக்களிடம் பிரதமர் மோடி பேசியுள்ளார். அப்போது
தொடர்ச்சியான தவறுகள் மூலம் நான் ஊடகங்களுக்கு தீனி போட்டு வருகிறோம். சமூக விஞ்ஞானி போல் ஆய்வாளர்கள் போல நீங்கள் தெரிவிக்கும் கருத்துகள் ஊடகங்களில் பெரிதாக்கப்பட்டு விடுகிறது.

இது ஊடகங்களின் தவறல்ல. அவர்கள் அவர்களின் வேலையை செய்கிறார்கள். ஆரவக்கோளாறில், அர்த்தமற்ற கருத்துகளை கூறுவதை நீங்கள் உடனடியாக நிறுத்திக்கொள்ள வேண்டும் ஏனெனில் இதனால் கட்சிக்கும், ஆட்சிக்கும் அவப்பெயர் உருவாகி வருகிறது.” என அவர் அறிவுரை கூறியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Do not talk needlessness , Modi advised ..!


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->