பெங்களூர்: பெண் குளிப்பதை வீடியோ எடுக்க முயன்ற தமிழகத்தைச் சேர்ந்தவர் கைது.! - Seithipunal
Seithipunal


பெங்களூருவில் பெண் குளிப்பதை வீடியோ எடுக்க முயன்ற தமிழகத்தை சேர்ந்தவரை போலீசார் கைது செய்தனர்.

கர்நாடக மாநிலம் பெங்களூரு கலாசிபாளையம் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட ஜே.சி. சாலையில் உள்ள ஒரு தனியார் தங்கும் விடுதியில் மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் தனது கணவருடன் தங்கி இருந்தார். 

அப்பொழுது அந்த பெண், குளியல் அறையில் குளித்துக் கொண்டிருந்தபோது, வென்டிலேஷன் விசிறி இருந்த பகுதியில் ஒரு செல்போன் இருந்ததை கண்ட அவர், யாரோ வீடியோ எடுப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.

இதையடுத்து அந்தப் பெண் சத்தம் போட்டு கூச்சலிடவே, பக்கத்து அறையில் இருந்த வாலிபர் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார். இதை எழுதும் இந்த சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட பெண் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

இந்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டதில், அந்தப் பெண் தங்கி இருந்த அறைக்கு அருகே நண்பர்களுடன் தங்கியிருந்த தமிழகத்தை சேர்ந்த முத்துகுமார் என்பவர் குளிப்பதை வீடியோ எடுக்க முயன்றது தெரிய வந்தது.

மேலும் இவர் இருசக்கர வாகனங்களுக்கு தேவையான உதிரி பாகங்களை வாங்குவதற்கு பெங்களூருக்கு வந்த நிலையில் இந்த சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து அவரிடமிருந்த செல்போனை பறிமுதல் செய்த போலீசார் முத்து குமாரை கைது செய்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Man from Tamil Nadu was arrested for trying to take a video of a woman taking a bath in bangalore


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->