பிரச்சாரத்தில் அமைச்சர் கார் மோதி உயிரிழந்த தொண்டர் - பெங்களூரில் சோகம்.! - Seithipunal
Seithipunal


கர்நாடகா மாநிலத்தில் உள்ள பெங்களூரு, கே.ஆர்.புரம் பகுதியைச் சேர்ந்த பாஜக தொண்டரான பிரகாஷ் பெங்களூரு வடக்கு தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடும் மத்திய அமைச்சர் ஷோபா கரந்தலஜேவுக்கு ஆதரவாக பிரச்சாரம் மேற்கொள்ள இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். 

இதையடுத்து அவர் கே.ஆர்.புரம் விநாயகர் கோயில் அருகே சென்று கொண்டிருந்தபோது, அங்கு நின்று கொண்டிருந்த அமைச்சர் ஷோபா கரந்தலஜேவின் கார் கதவு திறந்திருந்தது. இதன் மீது பிரகாஷின் இருசக்கர வாகனம் மோதியதில் அவர் சாலையில் தடுமாறி கீழே விழுந்தார்.

அந்த நேரத்தில் அந்த வழியே வந்த தனியார் பேருந்து பிரகாஷ் மற்றும் அவரது இருசக்கர வாகனம் மீது மோதியது. இதனால், படுகாயமடைந்த பிரகாஷை அக்கம்பக்கத்தினர் மீட்டு, மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். 

இந்த நிலையில், பிரகாஷின் இறப்புக்கு இரங்கல் தெரிவித்துள்ள அமைச்சர் ஷோபா கரந்தலஜே, "இந்த விபத்து குறித்த விசாரணையில் அதிகாரிகளுக்கு முழு ஒத்துழைப்பு வழங்குவதாக தெரிவித்துள்ளார். மத்திய அமைச்சரின் காரில் மோதி, பாஜக தொண்டர் உயிரிழந்த சம்பவம் பெங்களூருவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

man died election campaighn in karnataga


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->