அத்தியாவசிய தேவைக்கு கூட அல்லாட வேண்டிய அபாயம்.. இன்று இந்தியாவே ஸ்தம்பிக்க போகிறது : அரசின் அவசர முடிவால் வந்த வினை..? - Seithipunal
Seithipunal


டீசல் விலை உயர்வைக் கண்டித்து நாடு முழுவதும் உள்ள லாரி உரிமையாளர் சங்கத்தினர் இன்று முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுகின்றனர்.

இந்தியா முழுவதும் 75 லட்சத்திற்கும் மேற்பட்ட சரக்கு லாரிகள் இயக்கப்பட்டு வருகின்றன. டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வருவது, சுங்கச் சாவடி கட்டண உயர்வு, காப்பீடுத் தொகை உயர்வு உள்ளிட்ட காரணங்களால் லாரி தொழில் கடும் பாதிப்பை சந்தித்து வருவதாக லாரி உரிமையாளர்கள் கூறுகின்றனர்.

லாரி தொழிலை முடக்கும் வகையிலான பாதிப்புகளைக் களைய மத்திய அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி இன்று முதல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். டீசலை ஜி.எஸ்.டி.க்குள் கொண்டுவந்தால் விலை லிட்டருக்கு 20 ரூபாய் வரை குறையும் என்பதால் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

மேலும் டீசல் விலையை மூன்று மாதத்திற்கு ஒரு முறை நிர்ணயம் செய்ய வேண்டும், சுங்க கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பிரதமருக்கு கடிதம் அனுப்பப்பட்டதாக லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் தெரிவித்தனர்.

ஆனால் இதுவரை தங்களது கோரிக்கை மீது மத்திய அரசு எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறி லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளனர்.

நாடு முழுவதும் 75 லட்சம் வாகனங்களும், தமிழகத்தில் மட்டும் 13 லட்சம் சரக்கு வாகனங்கள் இயக்கப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, இந்த போராட்டத்தில் கலந்து கொள்ளப்போவதில்லை என மணல் லாரி உரிமையாளர்கள் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Lorry owners announced Continues strike due to diesel price hike


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->