செல்போனில் மகள் செய்த வேலை.! கடுப்பான தந்தை.!! அதிர்ச்சியில் உறைந்த போலீசார்.!! - Seithipunal
Seithipunal


இன்றைய இணையதள வாழ்க்கையை இளம் வயதினர் முதல் அனைவரும் அனுபவித்து வருகின்றனர். உலகம் உங்கள் கையில்" என்ற பழமொழிக்கு ஏற்றாற்போலவே நமது கைகளில் இருக்கும் அலைபேசிகளின் மூலமாக அனைத்தையும் கற்றுக்கொண்டு வருகிறோம். 

இதன் மூலம் உள்ள நன்மைகளும்., தீமைகளும் நாம் அதனை எந்த விதத்தில் உபயோகம் செய்கிறோம் என்பதை பொறுத்தே அமையும்., பலர் அலைபேசிகள் மட்டும் தான் தங்களின் வாழ்க்கை என்று அதிலேயே முடங்கி கிடக்கின்றனர். 

மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் உள்ள பாலகர் மாவட்டத்தை சார்ந்தவர் முகமது மன்சூரி (40)., இவருக்கு 16 வயதுடைய மகள் ஒருவர் இருக்கிறார். முகமது மன்சூரியின் மகள் எந்த நேரத்திலும் அலைபேசியை உபயோகம் செய்வதை வழக்கமாக வைத்துள்ளார். 

இதனை கவனித்த மன்சூரி தனது மகளை அவ்வப்போது கண்டித்து இருந்துவந்துள்ளார். ஆனாலும் அவரின் மகள் கண்டித்த நேரம் அமைதியாக இருந்துவிட்டு பின்னர் நேரம் கழித்தவுடன் அலைபேசியை உபயோகம் செய்ய துவங்கிவிடுவதை வழக்கமாக வைத்துள்ளார். 

இந்நிலையில்., நேற்று வீட்டில் இருந்த குடும்பத்தார்கள் வெளியே சென்றுவிட்ட நிலையில்., தந்தையும் மகளும் வீட்டில் இருந்துள்ளனர். வீட்டில் தந்தை இருந்த சமயத்தில் அவர் அலைபேசியை வழக்கம் போல உபயோகம் செய்ய துவங்கியுள்ளார். 

இதனை கண்டு ஆத்திரமடைந்த முகமது தனது மகளை கண்டிக்கவே இவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த முகமது மகளின் மீது மண்ணெண்ணெய்யை ஊற்றி தீவைத்துள்ளார். இதனால் உடல் முழுவதும் தீப்பற்றி எரியத்தொடங்கியதும் தீயின் தாக்கத்தை தாங்காமல் அலறிய இவரின் சத்தத்தை கேட்டு அக்கம் பக்கத்தினர் பதறியடித்து இல்லத்திற்குள் விரைந்தனர். 

தீயின் தாக்கத்தால் உடல் முழுவதும் கருகிய நிலையில் உயிருக்கு போராடிய அவரை மீட்ட அக்கம் பக்கத்தினர் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். மருத்துவமனையில் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வரும் நிலையில்., காவல் துறையினர் சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

long time using mobile phone a dad burn her daughter


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->