காதல் தோல்வி அடைந்த வாலிபரின் வெறிச்செயல்! விசாரணையில் திடுக்கிடும் தகவல்! - Seithipunal
Seithipunal


கேரளா, எர்ணாகுளம் குறுப்பம்பாடி பகுதியைச் சேர்ந்தவர் ஜேக்கப். இவரது மனைவி மஞ்சு. இவர்களுக்கு அல்கா அன்னா பினு (வயது 20) என்ற மகள் உள்ளார். 

இவர் செவிலியர் கல்லூரியில் படித்து வந்தார். மாணவி வீட்டில் கடந்த 5-ந்தேதி இருந்தபோது அவரது வீட்டிற்குள் இரிங்கோல் பகுதியைச் சேர்ந்த பசில் (வயது 21) என்ற வாலிபர் வந்து மாணவியை கத்தியால் சரமாரியாக வெட்டியுள்ளார். 

இதனை பார்த்து தடுத்த மாணவியின் தாத்தா மற்றும் பாட்டிக்கு வெட்டு விழுந்தது. இந்த தாக்குதலால் 3 பேரும் படுகாயம் அடைந்தனர். 

மாணவிக்கு தலை மற்றும் கழுத்து பகுதியில் பலத்த வெட்டு காயம் ஏற்பட்டது. இதனை அறிந்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக வந்து பலத்த காயமடைந்த மாணவியை மீட்டு பெரும்பாவூரில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். 

இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தி மாணவியை வெட்டிய பசிலை போலீசார் அவரது வீட்டிற்கு சென்று பார்த்தபோது அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. 

பசில் மாணவியை வெட்டிவிட்டு எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தினர். விசாரணையில் மாணவியும் வாலிபரும் வெவ்வேறு கல்வி நிறுவனத்தில் படித்த போதும் இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. 

மாணவியை வாலிபர் காதலித்து வந்த நிலையில் மாணவி வாலிபருடன் பேசுவதை தவிர்த்ததால் இந்த சம்பவம் நடந்துள்ளது. 

காதல் தோல்வி அடைந்த ஆத்திரத்தில் வாலிபர் மாணவியை வெட்டி தற்கொலை செய்திருக்கலாம் என போலீசார் தெரிவிக்கின்றனர். 

இந்நிலையில் மாணவி மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இறந்து விட்டார். இதனை அடுத்து போலீசார் கொலை முயற்சி வழக்கை கொலை வழக்காக மாற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Kerala nursing student dead


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->