கழுதைக்கு இருப்பது கூட இந்த தந்திரிகளுக்கு கிடையாது.! சபரிமலை விவகாரம், அமைச்சரின் சர்ச்சை பேச்சால் கிளம்பும் எதிர்ப்புகள் .!! - Seithipunal
Seithipunal


 கழுதைகளுக்கு இருக்கும் கருணை கூட சபரிமலை அய்யப்பன் கோயில் தந்திரிகளுக்கு கிடையாது என கேரள அமைச்சர் சுதாகரன் பேசியிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

கேரள மாநிலத்தில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு 10 முதல் 50  வயதிற்குட்பட்ட   அனைத்து  பெண்களும் செல்ல அனுமதி வழங்கி  என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்தது. இந்த தீர்ப்புக்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இந்நிலையில் பூஜைக்காக கோவில் நடை திறக்கப்பட்ட போது  சில பெண்கள்  கோவிலுக்குள் நுழைய முயன்றனர். ஆனால் அவர்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஐயப்ப பக்தர்கள் கடும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.மேலும் இதன் காரணமாக பெண்கள் திருப்பி அனுப்பப்பட்டனர்.

இந்நிலையில் கோவிலுக்குள் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க உத்தரவிட்ட தீர்ப்பை சீராய்வு செய்யக்கோரி உச்சநீதிமன்றத்தில் பலரும் மனுத்தாக்கல் செய்திருந்தனர்.

அதனைதொடர்ந்து பெண்களை சபரிமலை அய்யப்பன் கோயிலுக்குள் அனுமதிக்க கோயில் தந்திரி குடும்பத்தினரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மேலும் தற்போதைய தலைமை தந்திரி கன்டரேரு ராஜீவாரு என்பவரும் கடும் எதிர்ப்பை தெரிவித்து வருகிறார். 

இந்நிலையில் ஆலப்புழாவில் கலாச்சார விழா ஒன்றில் கலந்து கொண்டு பேசிய பொதுப்பணித்துறை அமைச்சர் சுதாகரன், சபரிமலை தந்திரி குறித்து கருத்து கூறியிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

நிகழ்ச்சியில் அமைச்சர் சுதாகரன் பேசுகையில் கூறியதாவது, சபரிமலையில் உள்ள கழுதைகள் நிறைய வேலைகள் செய்கின்றன. ஆனால் அவைகள் ஒருநாள் கூட போராட்டம் நடத்தியதில்லை. கடுமையான பணிக்கு பிறகு பம்பை நதிக்கரையில் ஓய்வெடுக்கின்றன. அந்த கழுதைகளுக்கு இருக்கும் கருணை கூட சபரிமலை அய்யப்பன் கோயில் தந்திரிக்கு இல்லை. அவர்களுக்கு அய்யப்பன் மீது ஈடுபாடோ அல்லது எந்த அக்கறையோ கிடையாது என தெரிவித்துள்ளார்.இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் அமைச்சர் சுதாகரனின் இந்த கருத்துக்கு சபரிமலை தந்திரிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அமைச்சர் தனது கருத்தை வாபஸ் பெற்று மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.


 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

kerala minister talk controversy about sabarimalai priest


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->