கர்நாடக முன்னாள் மந்திரி அரசியலில் இருந்து திடீர் ஓய்வு… சீட் கொடுக்கத்துதான் காரணமா? - Seithipunal
Seithipunal


கர்நாடக முன்னாள் முதல் மந்திரியும் முன்னாள் மந்திரிமான வீரப்பமொய்லி வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் சிக்பள்ளாப்பூர் தொகுதியில் போட்டியிட காங்கிரசில் சீட் கேட்டார். 

ஆனால் அவருக்கு கிடைக்கவில்லை. அவருக்கு பதிலாக காங்கிரஸ் இளைஞர் அணி நிர்வாகிக்கு வாய்ப்பு வழங்கப்பட்டதால் அவர் அதிருப்தியில் இருந்து வந்தார். 

இந்நிலையில் அவர் அரசியலில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இது குறித்து இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர், சிக்பள்ளாப்பூர் தொகுதியில் போட்டியிட நான் சீட் கேட்டேன். 

ஆனால் கட்சி மேலிடம் என்னை விலகிக் கொள்ளுமாறு தெரிவித்தது. கட்சி மேலிடத்தின் முடிவை ஏற்று நான் போட்டியிலிருந்து விலகிக் கொண்டேன். 

நான் தேர்தல் அரசியலில் இருந்து ஓய்வு பெறுகிறேன். எங்களது கட்சி வேட்பாளரை ஆதரிக்கிறேன். அவரை ஆதரிக்குமாறு எனது ஆதரவாளர்களையும் கேட்டுக் கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Karnataka EX minister retirement from politics


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->