இன்று முற்றிலும் ஸ்தம்பித்துப்போன கன்னியாகுமரி, பெரும் அவதியில் தவிக்கும் மக்கள், வெளியான அதிரவைக்கும் காரணம்.! - Seithipunal
Seithipunal



சபரிமலைக்கு இருமுடி கட்டுடன் சென்ற மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனைதடுத்து அவமதித்த கேரள காவல்துறையை கண்டித்து கன்னியாகுமரியில் பாஜக சார்பில் இன்று முழு அடைப்புப் போராட்டம் நடைபெறுகிறது. 

கடந்த வாரம் சபரிமலை கோவில் பூஜைக்காக திறக்கப்பட்டது. இரு மண்டல பூஜைக்காகவும், மகர விளக்கு பூஜைக்காகவும் கோவில் நடை திறக்கப்பட்டது. 

 இந்த நிலையில் பாஜக மூத்த தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் மாலை அணிந்து இருமுடிக்கட்டுடன்  நேற்று முன்தினம்  கோவிலுக்கு சென்றார். ஆனால் நிலக்கல் பகுதியில் அவரை தடுத்து நிறுத்திய மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் யதீஷ் சந்திரா பொன். ராதாகிருஷ்ணன் தொண்டர்களுடன் கோவிலுக்குள் செல்ல அனுமதி மறுத்துள்ளார்.

இந்நிலையில் இருவருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது . இதனால் அப்பகுதியில் பரபரப்பான சூழ்நிலை நிலவியது. 

மேலும் கேரள காவல்துறை அதிகாரியின் நடவடிக்கைக்கு, தமிழக பா.ஜ.க. தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில்  இந்த சம்பவத்தை கண்டித்து, கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை, களியக்காவிளையில் கேரள அரசுப் பேருந்துகளை சிறைபிடித்து பா.ஜ.க.வினர் போராட்டம் நடத்தினர். 

இதனையடுத்து அங்கு கடைகள் அடைக்கப்பட்டுள்ளன.  கன்னியாகுமரியிலிருந்து கேரளாவிற்கு செல்லும் பேருந்துகள் இயக்கப்படவில்லை. மேலும் கேரளாவிலிருந்து தமிழகத்திற்கு வரும் பேரூந்துகள் எல்லையில் தடுத்து நிறுத்தப்படுகின்றன. 

மேலும் இந்த முழு அடைப்பால் கன்னியாகுமரி மாவட்டத்தில் இன்று நடைபெற இருந்த மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை. தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த போராட்டத்தால்  தமிழக-கேரள எல்லையில் போலீசார் குவிக்கப்பட்டனர்.இதனால் பொதுமக்கள் பெரும் அவதி அடைந்துள்ளனர்.  
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

kanniyakumari full strike by bjp


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->