அதிக வழக்குகளில் தீர்ப்பளித்து வரலாற்று சாதனை புரிந்த நீதிபதி! எத்தனை வழக்குகள் தெரியுமா? - Seithipunal
Seithipunal


அலகாபாத் ஐகோர்ட்டு மூத்த நீதிபதி சுதிர் அகர்வால் தான் 2005 ஆம் ஆண்டு முதல் தன்னுடைய நீதி வாழ்க்கையை தொடங்கினார். இவர் தன்னுடைய பணியை தொடங்கியது முதல் பல முக்கிய வழக்குகளை சந்தித்துள்ளார். இவர் ரிட், சிவில், குற்றவியல், வரி விவகாரம், மேல்முறையீடு என அனைத்துவிதமான வழக்குகளையும் விசாரித்துள்ளார்.

மேலும் அயோத்தி சர்ச்சை பிரச்னைக்குரிய வழக்கிலும் இவர் பங்கேற்றுள்ளார். கடந்த  2010-ம் ஆண்டு அயோத்தியில் சர்ச்சைக்குரிய நிலம் யாருக்கு சொந்தம் என்ற வழக்கில் தீர்ப்பு அளித்த அமர்வில் இவரும் இடம் பெற்றிருந்தார். 

மேலும், அனைத்து அரசு அதிகாரிகளும் தங்கள் பிள்ளைகளை அரசு தொடக்கப்பள்ளிகளில் சேர்க்க வேண்டும் என்று கடந்த 2015-ம் ஆண்டு சிறப்பான தீர்ப்பளித்து தலைப்பு செய்திகளில் இடம் பிடித்தார். இவர் இதுவரை ஒரு லட்சத்து 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வழக்குகளில் தீர்ப்பு அளித்து, இந்திய நீதித்துறை வரலாற்றில் சாதனை படைத்துள்ளார்.

அந்த வகையில், இவர் தீர்ப்பளித்த 1,788 தீர்ப்புகள், சர்வதேச, தேசிய சட்ட பத்திரிகைகளில் வெளியாகியது. இவரது பதவிக்காலம் வரும் 2020-ம் ஆண்டு ஏப்ரல் 23 ஆம் தேதி முடிவடைய உள்ளது. மேலும் எத்தனை வழக்குகள் சந்தித்து தீர்ப்பளித்து சாதனை படைப்பார் என்று பொறுத்திருந்து பார்ப்போம்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Judge who judged the highest number of judgments Know how many cases


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->