ஜூலை 13-ல் விண்ணில் பாய்கிறது சந்திராயன்-3..! இஸ்ரோ அறிவிப்பு!! - Seithipunal
Seithipunal


நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்வதற்காக சந்திராயன்-2 விண்கலத்தை இந்தியா கடந்த 2019 ஆம் ஆண்டு விண்ணில் செலுத்தியது. அப்பொழுது சந்திராயன் விண்கலத்தின் லேண்டர் கலன் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக நிலவில் சென்று வேகமாக மோதி விபத்துக்குள்ளானது. அதேசமயம் விண்கலத்தின் மற்றொரு பகுதியான ஆர்பிட்டர் நிலவின் சுற்றுப்பாதையில் வெற்றிகரமாக நிலை நிறுத்தப்பட்டது. 

நிலவின் மேற்பகுதியை ஆய்வு செய்து பல்வேறு புகைப்படங்களை ஆர்பிட்டர் அனுப்பி வைத்தது. ஏற்கனவே ஆர்பீட்டர் நிலவை சுற்றி வருவதால் சந்திராயன்-3 திட்டத்தின் மூலம் லேண்டர் மற்றும் ரோவர் மட்டும் அனுப்ப திட்டமிடப்பட்டது.

இந்த திட்டத்தின்படி ஜி.எஸ்.எல்.வி மார்க்-3 ராக்கெட் மூலம் சந்திராயன்-3 விண்கலம் வரும் ஜூலை 13ஆம் தேதி பிற்பகல் 2:30 மணி அளவில் விண்ணில் ஏவப்படும் என இஸ்ரோ விஞ்ஞானிகள் அறிவித்துள்ளனர். ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவான் ராக்கெட் ஏவுதலத்தில் இருந்து சந்திராயன்-3 விண்கலம் ஏவப்பட உள்ளது.

சந்திராயன்-3 விண்கலம் லேண்டர், ரோவர் மற்றும் உந்துவிசை ஆகியவற்றுடன் நவீன தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. நிலவின் மேற்பரப்பில் பாதுகாப்பாக இறங்கி உலாவரும் அளவிற்கு  லேடர் மற்றும் ரோவர் நவீன கட்டமைப்பை கொண்டுள்ளது.

சமீபத்தில் ஜிஎஸ்எல்வி மார்க்-3 ராக்கெட் உடன் சந்திராயன்-3 விண்கலம் வெற்றிகரமாக பொருத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து ராக்கெட்டின் அடுக்குகளை ஒன்றிணைக்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ஜூலை 12ம் தேதிக்குள் அனைத்து பணிகளும் முடிக்கப்பட்டு ஜூலை 13ஆம் தேதி ஜி.எஸ்.எல்.வி மார்க்-3 ராக்கெட் உடன் சந்திராயன்-3 விண்கலம் விண்ணில் ஏவப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ISRO announced Chandrayaan3 will launch on July13


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->