இடது காலிற்கு பதிலாக வலது காலில் அறுவை சிகிச்சை.! அரசு மருத்துவர்களின் அந்தர் பல்டி ஆப்ரேஷன்.! - Seithipunal
Seithipunal


கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்தில் உள்ள நீலாம்பூரைச் சேர்ந்தவர் ஆயிஷா. இவருக்கு ஒராண்டுக்கு முன் விபத்து ஒன்றில் இடது காலில் எலும்பு முறிவு ஏற்பட்டிருக்கிறது. அவருக்கு இடது காலில் இரும்பால் செய்யப்பட்ட செயற்கை எலும்பு ஒன்று அறுவை சிகிச்சை மூலம் பொறுத்தப்பட்டது.

இந்நிலையில், அந்த எலும்பை நீக்குவதற்காகவே முடிவு செய்திருந்தார். அதற்காக, அவர் கடந்த வாரம் மலப்புரம் அரசு மருத்துவமனைக்குச் சென்றுள்ளார். அப்போது, அவர் தனது இடது காலில் செய்யப்பட்ட எக்ஸ்ரே சான்றிதழையும்  மருத்துவமனையில் காண்பித்துள்ளார்.

பின்னர், மருத்துவர் இடது காலில் செய்ய வேண்டிய அறுவை சிகிச்சையை வலது காலில் செய்து விட்டார். பின் தான் தவறாக சிகிச்சை செய்துவிட்டதை உணர்ந்து, மீண்டும் இரண்டாவதாக இடது காலில் அறுவை சிகிச்சை செய்துள்ளார்.

இதையடுத்து, ஆயிஷா மருத்துவர் மீது குற்றம்சாட்டபோது, மருத்துவர்கள் அனைவரும் ஆயிஷாவை குற்றம் சுமத்தினர். அவர்தான் இடது,வலது என குழப்பினார் என்று அவர் மீது பழி கூறியுள்ளனர்.

English Summary

Instead of the left leg, the right to the doctor and the government doctors!


கருத்துக் கணிப்பு

உலக கோப்பைக்கான இந்திய கிரிக்கெட் அணி...கருத்துக் கணிப்பு

உலக கோப்பைக்கான இந்திய கிரிக்கெட் அணி...
Seithipunal