அந்த ஒன்று கசிந்தாலும்.......?? கண்ணில் விளக்கெண்ணையை ஊற்றிகொண்டு இந்தியாவை கண்காணிக்கும் உலக நாடுகள்..!! - Seithipunal
Seithipunal


கார்டோ சாட்-2’ உட்பட 31  சாட்லைட்டுகள் ‘பிஎஸ்எல்வி சி-40’ ராக்கெட் மூலம் இன்று காலை 9.28 மணிக்கு விண்ணில் ஏவப்பட்டது

ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஸ் தவாண் விண்வெளி ஆய்வு மையத்தின் முதலாம் ஏவுதளத்தில் இருந்து ஏவப்பட்ட  31 சாட்லைட்டுகளில் இந்தியாவுக்கு சொந்தமான 3 சாட்லைட்,  அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா, பின்லாந்து, பிரான்ஸ், கொரியா ஆகிய 6 நாடுகளுக்கு சொந்தமான 28 சாட்லைட்டுகளையும் இஸ்ரோ விண்ணில் ஏவி உள்ளது.

 ‘கார்டோசாட்-2’ சாட்லைட்டு அதிநவீன சென்சார் டெக்னாலஜி உடன் இயங்கக் கூடியதாகும். புவியின் மேற்பரப்பை மிக துல்லியமாக படமெடுக்கும் திறன் கொண்டதாகும்.

இந்த செயற்கைக்கோள் அனுப்பும் படங்கள் வரைப்பட தயாரிப்பு, நில அளவீடு போன்ற பல்வேறு பயன்பாடுகளுக்கு மிகவும் உதவியாக இருக்கும். வணிக ரீதியாக பல பயன்பாட்டிற்கு உறுதுணையாக இந்த புகைப்படங்கள் இருக்கும்.

இதுநாள் வரையிலும் நமது நாட்டு செயற்கை கோள்களை விண்ணில் செலுத்துவதில் தீவிர கவனம் செலுத்திய இந்தியா தற்போது வணிக ரீதியாகவும் செயற்கை கோளை விண்ணில் ஏவும் முயற்சிகளை தொடங்கி விட்டது.

உலக அளவில் விண்வெளி தொழில்நுட்பத்தில் உச்சத்தில் இருக்கும் நாசாவே இந்தியாவின் இஸ்ரோ அளவிற்கு குறைவான செலவில் நம்பகத்தன்மை வாய்ந்த ஏவுதலை மேற்கொள்ள திணறுகிறது.

ஆனால் சர்வ சாதாரணமாக முப்பது முதல் நாற்பது செயற்கை கோளை இந்தியா விண்ணில் செலுத்துகிறது.

விண்வெளி தொழில்நுட்பத்தில் புதிய புரட்சியாக இந்தியா உருவெடுத்து இருப்பதால், தானே ஒரு விண்வெளி நிலையத்தை விண்ணில் ஏவி அதும் தோல்வி அடைந்த விரக்தியில் இருக்கும் சீனா இந்தியாவின் இரகசிய நுட்பத்தை கைப்பற்ற முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

indias space technology attempt to be happen


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->