பார்த்து பார்த்து 66 வருடம் இந்தியாவில் வளர்த்ததை அள்ளி சென்ற அமெரிக்கா! - Seithipunal
Seithipunal


மகாராஷ்டிரா மாநிலம்,புனே நகரை சேர்ந்தவர் ஸ்ரீதர் சில்லால். 88 வயதான இவர் கடந்த 1952-ம் ஆண்டுமுதல் தனது இடது கையில் உள்ள  நகத்தை வெட்டாமல், வளர்க்க ஆரம்பித்தார். இதனால் தன்னுடைய கையினை அசைக்காமல் வைத்திருந்தார். அதனால் அந்த கை பாதிக்கப்பட்டது. 

ஆயினும் வளர்த்ததன் பயனாக உலகிலேயே ஒரு கையில் மிக நீளமான நகத்தை கொண்டவர் என்ற முறையில் கடந்த 2016-ம் ஆண்டு கின்னஸ் சாதனை புத்தகத்தில்  இடம்பிடித்தார். கடந்த 66 ஆண்டுகளில் அவர் வளர்த்த நகங்களின் ஒட்டுமொத்த நீளம் தற்போது 909.6 செண்டிமீட்டர்களாக உள்ளது. இதில் அவரது இடது கை கட்டை விரலில் உள்ள நகத்தின் நீளம் மட்டும் 197.8 செண்டிமீட்டர் ஆகும்.

இந்நிலையில், அமெரிக்காவிற்கு சென்று 66 ஆண்டுகளுக்கு பிறகு முதல்முறையாக ஸ்ரீதர்  இன்று தனது கை நகங்களை வெட்டுகிறார்.  அமெரிக்காவின் பிரபலமான ‘ரிப்லி’ஸ் பிலிவ் இட் ஆர் நாட்’ ’நம்பினால் நம்புங்கள்’ என்னும் தொலைக்காட்சி தொடர்  ஒளிபரப்பாகிறது. உலகில் அதிசயமான செயல்கள் மற்றும் சாதனைகள் புரிந்தவர்களின் பதிவுகளை இந்த தொடர் ஒளிபரப்பி வருகிறது.

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள டைம்ஸ் சதுக்கத்தில் அமைந்துள்ள இந்த அலுவலகத்தில் ஆச்சரியப்பட வைக்கும் அரியப் பொருட்களை சேமித்து  வைக்கும் அருங்காட்சியகமும் இருக்கிறது. ஆசையாசையாக கடந்த 66 ஆண்டுகளாக பேணிப் பராமரித்து, பாதுகாத்து இந்தியாவில் வளர்த்த நகத்தை இந்த அருங்காட்சியகத்தில் வைக்க ஸ்ரீதர் விரும்பியதால்,இதற்கான அனுமதியை ‘ரிப்லி’ஸ் பிலிவ் இட் ஆர் நாட்’ நிகழ்ச்சி தயாரிப்பாளர்களிடம் பெற்றுள்ளார். 

இதையடுத்து, இந்தியாவில் இருந்து விமானம் மூலம் நியூயார்க் சென்றுள்ள  ஸ்ரீதர் சில்லால், இன்று (புதன்கிழமை) பல கேமராக்கள் முன்னிலையில் தனது 66 ஆண்டுகால நகங்களை வெட்டுகிறார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

indian guinness recorder decide 66 yaers nail goes to amerikka,


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->