இந்தியாவை நெருங்கி வரும் பேராபத்து.? அம்பலமானது பாகிஸ்தானின் சதி - எல்லையில் நிலவும் உச்சகட்ட பதற்றம்.! - Seithipunal
Seithipunal


முன்பெல்லாம் பாகிஸ்தானில் தயாரிக்கப்பட்ட வெடிகுண்டுகள்தான் தீவிரவாதிகளுக்கு எளிதாகக் கிடைத்தது. அவற்றை தீவிரவாதிகள் தாக்குதலுக்குப் பயன்படுத்தினர். அதனால் பாகிஸ்தான் ராணுவத்தின் பின்னணி உலகளவில் அம்பலமாகி வந்தது. அதை தடுக்க இப்போது சீன வெடிகுண்டுகளை பாகிஸ்தான் சப்ளை செய்து வருகிறது என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

ஜம்மு காஷ்மீரில் ரோந்துப் பணி, வாகன சோதனையில் ஈடுபடும் சிஆர்பிஎப் வீரர்கள், ராணுவ முகாம்கள், போலீசார் மீது பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

கடந்த 15 மாதங்களில் நடந்த தாக்குதலுக்குப் பிறகு அந்த இடங்களில் தடயங்களை சேகரித்து பாதுகாப்புப் படையினர் ஆய்வு செய்த போது, சீன வெடிகுண்டுகளைத் தீவிரவாதிகள் பயன்படுத்தியது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தானுக்கு சீனா அதிநவீன வெடிகுண்டுகள், வெடிபொருட்களை வழங்கி வருகிறது. அவற்றை காஷ்மீரில் தாக்குதல் நடத்த தீவிரவாதிகளுக்கு பாகிஸ்தான் வழங்கி வருவது இதன்மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதுதொடர்பான ஆவணங்களில் கூறப்பட்டுள்ள புள்ளிவிவரத்தின்படி, கடந்த ஆண்டு ஜனவரி 1 ஆம் தேதி முதல் இதுவரை 70 சீன வெடிகுண்டுகளைப் பாதுகாப்புப் படையினர் கைப்பற்றி உள்ளனர்.

அத்துடன் கைத்துப்பாக்கிகள், இந்திய வீரர்களின் புல்லட் புரூப் கவசத்தை ஊடுருவி சென்று தாக்கும் சிறிய வகையிலான ஏவுகணை வடிவிலான குண்டுகளும் கைப்பற்றப்பட்டுள்ளன.

இது போன்ற ஆயுதங்களை பயன்படுத்த முறையான பயிற்சி தேவையில்லை. யார் வேண்டுமானாலும் கையாள முடியும் என்ற காரணத்தினால் பாகிஸ்தான் தீவிரவாதிகள் சீன ஆயுதங்களை வாங்கி குவித்து வருகின்றனர்.

இதனை வைத்து காஷ்மீர் மாநிலம் மீது தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளனர். இதனை தடுக்க இந்திய அரசு துரித கதியில் பாதுகாப்பு முன்னேற்பாடுகளை மேற்கொண்டு வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Indian-forces-seize-weapons-cache-full-of-Chinese


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->