இக்கட்டான நேரத்தில் இந்திய உளவுத்துறை வெளியிட்ட அறிவிப்பு.? பதிலடிக்கு தயாராகும் இந்தியா - பீதியில் உறைந்து போன பாகிஸ்தான்.! - Seithipunal
Seithipunal


பாகிஸ்தானுடன் எல்லைத் தாண்டிய வர்த்தகத்திற்கு இந்தியா தடை அறிவித்துள்ளது.

எல்லைத் தாண்டி செல்லும் சரக்கு வாகனங்களில் ஆயுதங்கள், போதைப் பொருள், கள்ளநோட்டுகள் போன்றவை இந்தியாவுக்கு கடத்தப்படுவதாக உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ஜம்மு-காஷ்மீரில் யூரி பகுதியின் சலாமாபாத் மற்றும் பூஞ்ச் பகுதியின் சக்கன்-டா-பாக்  மையங்கள் மூலம், எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு வழியாக பாகிஸ்தானுடன் வர்த்தகம் செய்ய அனுமதிக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில், சில வழக்குகள் தொடர்பாக என்ஐஏ எனப்படும் தேசிய புலனாய்வு நிறுவனம் நடத்திய விசாரணையில், இந்த வர்த்தக வழித்தடங்கள் தீவிரவாத அமைப்புகளால் முறைகேடாகப் பயன்படுத்தப்படுவது கண்டறியப்பட்டுள்ளது. இதையடுத்து இந்த வர்த்தகம் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.

இதனால் அனைத்து சரக்குப் போக்குவரத்துக்கும் எல்லையில் தடை விதிக்கப்பட்டுள்ளது.வாரத்தில் நான்கு நாட்களுக்கு இந்த வர்த்தகம் நடைபெறுவது வழக்கம்.

கணிசமான கடத்தல் பொருட்கள் எல்லைத் தாண்டிய வர்த்தகம் மூலமாகவே இந்தியாவுக்குள் வருவதாகவும், இவை இந்தியாவுக்கு எதிரான தீவிரவாத இயக்கங்களுக்குப் பயன்படுவதாகவும் தேசிய புலனாய்வு முகமை நடத்திய விசாரணயில் கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து இத்தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

india-suspends-cross-loc-trade-says-pak-based-elements-misusing-trade-routes


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->