பிரதமர் மோடி சாதனை..! மொபைல் துறையில் புதிய புரட்சி..!! உலகின் மிக பெரிய மொபைல் உற்பத்தி நிறுவனம்..!! - Seithipunal
Seithipunal


செல்லிடப்பேசி(மொபைல்) தயாரிப்பில் உலக அளவில் 2 ஆவது இடத்தில் இந்தியா உள்ளதாக பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்தார். மத்திய அரசின் "இந்தியாவில் தயாரிப்போம்"  திட்டத்தால் இந்த வளர்ச்சி என்று மோடி தெரிவித்தார்.

தில்லியை அடுத்த நொய்டாவில், தென்கொரியாவைச் சேர்ந்த சாம்சங் செல்லிடப்பேசி நிறுவனத்தின்   மிகப்பெரிய தொழிற்சாலையை அமைத்துள்ளது. இதனை பிரதமர் மோடி, தென் கொரிய அதிபர் மூன் ஜே-ஆகிய இருவரும், இந்த தொழிற்சாலையை நேற்று திங்கள்கிழமை திறந்து வைத்தனர்.

உலகிலேயே மிகப்பெரிய செல்லிடப்பேசி தயாரிப்பு தொழிற்சாலை இதுவாகும்.  
இதனை திறந்து வைத்து பேசிய பிரதமர் மோடி அவர்கள் தெரிவித்ததாவது:-
 
இந்த தொழிற்சாலை மூலம் ஆண்டுக்கு 12 கோடி செல்லிடப்பேசிகளை தயாரிக்க முடியும்.
இதன் மூலம், அடிப்படை வசதி கொண்ட செல்லிடப்பேசி முதல் அதிநவீன எஸ்9' செல்லிடப்பேசி வரை இந்த தொழிற்சாலையில் தயாரிக்கப்படவுள்ளது. 

இங்கு தயாரிக்கப்படும் செல்லிடப்பேசிகளில், 30 சதவீதம் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும்.

இவ்வாறு மோடி தெரிவித்தார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

India Prime Minister Modi New Samsung Comany In Delihi


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->