இந்தியாவில் வேகமாக குறையும் நிலத்தடி நீர்மட்டம்..! நாசா அதிர்ச்சி தகவல்..!! - Seithipunal
Seithipunal


இந்தியாவின் வடக்கு மற்றும் கிழக்கு மாநிலங்களில் நிலத்தடி நீர்மட்டம் வேகமாக குறைந்து வருவதாக அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசா, பூமியின் நிலத்தடி நீர்மட்டம் குறித்து ஆராய்வதற்காக செயற்கைக்கோள் ஒன்றை அனுப்பியிருந்தது. 

இந்த செயற்கை கோள் அனுப்பிய தகவல்கள் மூலம் உலக அளவில் 34 மண்டலங்களை சுமார் 14 ஆண்டுகளாக நாசா விஞ்ஞானிகள் ஆய்வு செய்தனர். அதன் முதற்கட்ட தகவல்கள் தற்போது வெளியாகினர். 

இதில் இந்தியாவின் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகள், மத்திய கிழக்கு நாடுகள், கலிபோர்னியா மற்றும் ஆஸ்திரேலியாவில் நிலத்தடி நீர்மட்டம் வேகமாக குறைந்து வருவதாகவும், இதனால் ஏற்கனவே பிரச்சினைகள் உருவாகி இருப்பதாகவும் ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டது.

நாசா வெளியிட்டிருக்கும் அறிக்கையின்படி, பூமியில் ஈரப்பதம் மிகுந்த இடங்கள் மேலும் ஈரமாகவும் உலர்ந்த நிலப்பரப்பு பகுதிகள் மேலும் உலர்ந்து காணப்படுகிறது. இதற்கு மோசமான நீர் மேலாண்மை மற்றும் பருவநிலை மாற்றங்கள் காரணம் எனக் கண்டுபிடிக்கப்பட்டது.

மேலும் இந்த ஆய்வுக்காலத்தில் வட இந்தியாவில் போதுமான அளவு மழை இருந்தும் அரிசி, கோதுமை போன்ற பயிர்களுக்காக அதிகளவில் உறிஞ்சப்படுவதும் நிலத்தடி நீர் குறைவுக்கான காரணம் எனவும் கண்டறியப்பட்டது . 

இதுகுறித்து கருத்து தெரிவித்த விஞ்ஞானிகள் பூமியை பொறுத்தவரை நிலத்தடி நீர்தான் மிகவும் அத்தியாவசிய வளம் என்றும், நிலத்தடி நீரை உறிஞ்சுவது எதிர்காலத்திற்கு நல்லதல்ல என்றும் கூறியுள்ளனர்.

இந்தநிலை நீடித்தால் இந்தியாவில் வடக்கு மற்றும் கிழக்கு பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் இல்லாத நிலை வந்துவிடும் நம் பிற்கால சங்கதிற்கு தண்ணீ இல்லாத நிலை ஏற்படும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

india is fast shrink in groundwater level


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->