அம்மாடியோவ்..! மோடியின் ஆட்சியின் இமாலய கடன்.. 82 லட்சம் கோடி.!! ஒட்டுமொத்த இந்தியாவிற்கும் கழுத்தை சுற்றி போடப்பட்ட துண்டு.!! - Seithipunal
Seithipunal


இந்தியாவின் பிரதமராக பணியாற்றி வரும் நரேந்திரமோடியின் நான்கரை வருடத்தின் ஆட்சிக்காலத்தில்., நாட்டின் ஒட்டுமொத்த கடன் தொகையானது மொத்தமாக 50 விழுக்காடு அளவிற்கு அதிகரித்துளளதாக வெளியான தகவல்கள் தெரிவித்திருப்பது நாட்டு மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

இந்தியாவின் பிரதமராக நரேந்திர மோடி அவர்கள் கடந்த 2014 ம் வருடம் நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி பெரும்பான்மை வெற்றி பெற்றவுடன் பதவியேற்றார். தற்போது அவரது பதவிக்காலம் விரைவில் நிறைவு பெரும் நிலையில்., அடுத்த நாடாளுமன்றத்திற்க்கான தேர்தலை நடத்துவதற்கான பணிகள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. 

இந்தியாவின் ஒட்டுமொத்த கடன்கள் குறித்து மத்திய அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலின் படி., இந்தியாவின் பிரதமராக நரேந்திர மோடி பதிவியேற்ற சமயத்தில் இந்தியாவின் கடன் தொகையானது ரூ.54,90,763 கோடியாக இருந்ததாகவும்., நான்கரை வருடங்கள் தற்போது நிறைவு பெற்ற பின்னர் தற்போது இந்தியாவின் ஒட்டுமொத்த கடன் தொகையானது ரூ.82 இலட்சம் கோடிக்கும் அதிகமாக உள்ளது என்று தகவல் வெளியாகியுள்ளது.

இந்த தொகையானது முன்னிருந்த தொகையை விட சுமார் 50 விழுக்காடு அளவிற்கு அதிகம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. அதே போன்று., பொதுக்கடனும் 48 இலட்சம் கோடியில் இருந்து சுமார் 73 கோடியாக உயர்ந்துள்ளதாகவும்., இதன் உயர்வு விழுக்காடானது சுமார் 51 விழுக்காடு அளவிற்கு அதிகம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும்., பொதுக்கடன் வெகுவாக அதிகரித்ததன் காரணமாக அனைத்து கடனும் அதிகரித்துள்ளது என்று கூறப்படுகிறது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

india have a big problem money loan by past four years


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->