வீரமரணம் அடைந்த இராணுவ வீரர்களின் குடும்பத்திற்கு ரூ.50 இலட்சம் அறிவிப்பு.!! - Seithipunal
Seithipunal


ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் இருக்கும் துணை இராணுவ வீரர்கள் சென்ற வாகனத்தின் மீது நடந்த வெடிகுண்டு தாக்குதலில் சுமார் 40 க்கும் மேற்பட்ட இராணுவ வீரர்கள் பரிதாபமாக பலியாகினர். இந்த தாக்குதலில் பலியானவர்களில் இருவர் மகாராஷ்டிரா மாநிலத்தை சார்ந்தவர் என்பது தெரியவந்துள்ளது. 

இந்த இராணுவ வீரர்களில் இரண்டு பேர் தமிழகத்தை சார்ந்தவர் என்ற தகவல் வெளியாகி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இந்திய இராணுவ வீரர்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர் என்ற தகவல் வெளியான தகவலை கேட்டே மீள முடியாமல்., தவித்து வந்த நிலையில் இந்த தகவலானது வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 

இந்த தாக்குதலில் பலியான மகாராஷ்டிரா மாநிலத்தை சார்ந்த இரண்டு வீரர்களின் இல்லங்களுக்கு சுமார் ரூ.50 இலட்சம் நிதிஉதவி வழங்கப்படவுள்ளதாக மகாராஷ்டிரா மாநிலத்தின் முதலமைச்சர் தேவேந்திர பிட்னாவிஸ் தெரிவித்துள்ளார். அதே போன்று மும்பை சித்தி விநாயகர் ஆலயத்தின் அறக்கட்டளையில் இருந்து ரூ.51 இலட்சம் வழங்கப்படவுள்ளதாக அறிவித்துள்ளது. 

ஜம்மு-காஷ்மீரில் நடந்த இந்த தாக்குதலுக்கு மாநிலம் முழுவதும் பல்வேறு போராட்டங்கள் நடந்தன. மராட்டிய மாநிலத்தின் தலைமை செயலகத்தில் வீரமரணம் அடைந்த வீரர்களுக்கு மவுன அஞ்சலியானது செலுத்தப்பட்டது. இந்த மவுன அஞ்சலி நிகழ்ச்சியில் மந்திரி சஞ்சய் ரத்தோடு., தலைமை செயலாளர் தினேஷ் குமார் ஜெயின் மற்றும் அரசாங்க அதிகாரிகள் கலந்துகொண்டனர். 

இறந்த இராணுவ அதிகாரிகளுக்கு காங்கிரஸ் கட்சியின் சார்பில்., காங்கிரஸ் அலுவலகத்தில் மவுன அஞ்சலியும்., பள்ளி மற்றும் கல்லூரிகளில் பயிலும் மாணவ - மாணவியர்களும் அஞ்சலி செலுத்தினர். வீரமரணம் அடைந்த இராணுவ வீரர்களுக்கு அஞ்சலி செலுத்திய பின்னர்., அன்று தாக்கல் செய்யப்பட இருந்த பட்ஜெட் தாக்கலானது ஒத்தி வைத்து அறிவிக்கப்பட்டது. 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in Mumbai govt announced died army officers family to get 50 lakhs cash


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->