தலைநகரில் உள்ள அடுக்குமாடி கட்டிடத்தில் ஏற்பட்ட பெரும் தீ விபத்து.! 16 தீயணைப்பு வாகனங்கள் தீயை அணைக்க போராட்டம்.!! - Seithipunal
Seithipunal


மேற்கு வங்காள மாநிலத்தின் தலைநகரான கொல்கத்தாவில் உள்ள தெற்கு பதுதியில் இருக்கும் கரிகட் என்னும் இடத்தில் ஐந்து மாடிகளை கொண்ட கட்டிடம் ஒன்று உள்ளது. இந்த கட்டிடத்தின் முதல் மற்றும் தரை தலத்தில் துணிக்கடைக்கான கிடங்கியும்., மேல் தளங்களில் குடியிருப்பும் அமையபெற்றுள்ளது.

இந்த கட்டிடத்தில் உள்ள தரைத்தளத்தில் அதிகாலை சுமார் 1 மணியளவில் திடீரென தீப்பற்றி மளமளவென எரியத் தொடங்கியது. இதனை கண்ட அப்பகுதி வாசிகள் உடனடியாக சம்பவம் குறித்து தீயணைப்பு படையினருக்கு தகவல் தெரிவித்தனர். 

தகவலை அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு படையினர் சுமார் 16 வாகனங்கள் மூலமாக தீயின் மீது தண்ணீரை பாய்ச்சி அடித்து., தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். தீவிபத்து ஏற்பட்டதும்., குடியிருப்பில் இருந்த அனைவரும் நல்ல வேலையாக சுதாரித்து கட்டிடத்தை விட்டு பதறியபடி கட்டிடத்தில் இருந்து வெளியேறினார். 

இதன் காரணமாக நல்ல வேலையாக மக்கள் யாருக்கும் எவ்வித காயமும் ஏற்படவில்லை. அந்த கிட்டங்கியில் இருந்த பொருட்கள் அனைத்தும் தீக்கு இரையானது. இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in kolkatha a five floor building collapsed by a big fire accident


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->