எறிந்த நிலையில் தூக்கில் இருந்து மீட்கப்பட்ட கல்லூரி மாணவியின் சடலம்.! மாணவிக்கு அரங்கேறிய கொடூரம்., வெளியான அதிர்ச்சி தகவல்.!! - Seithipunal
Seithipunal


கர்நாடக மாநிலத்தில் உள்ள ராய்ச்சூர் மாவட்டத்தில் உள்ள டவுன் பகுதியைச் சார்ந்த பெற்றோரின் 20 வயது மகள் அங்கு உள்ள தனியார் கல்லூரியில் பயின்று வருகிறார். இவர் கடந்த 13ம் தேதி அன்று கல்லூரிக்கு சென்று வருவதாக கூறி சென்ற நிலையில்., மாணவி மீண்டும் வீட்டிற்கு திரும்பவில்லை. 

இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் அவரை பல இடங்களில் தேடியும் காணாததால்., இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இது குறித்த புகாரை ஏற்ற காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு மாணவியை தேடி வந்தனர். 

இந்த சூழ்நிலையில் கடந்த 16ம் தேதி என்று அங்குள்ள நேதாஜி நகர் கோவிலுக்கு பின்புறம் உள்ள இடத்தில் எரிந்து அழுகிய நிலையில் மாணவியின் உடலானது தூக்கில் தொங்கப்பட்டு இருப்பதை கண்ட பொதுமக்கள் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.  தகவலை அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர் மாணவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

இந்த நிலையில் மாணவி எழுதி வைத்திருந்த கடிதம் ஒன்றை காவல் துறையினர் கைப்பற்றினர். அந்த கடிதத்தில் மாணவி குறிப்பிட்டதாவது., எனது சாவுக்கு யாரும் காரணம் இல்லை என்றும்., எனக்கு வாழப் பிடிக்காத காரணத்தால் இந்த முடிவை நான் எடுத்துள்ளேன் என்றும்., இதனால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து உள்ளேன் என்றும் கூறியிருந்தார். 

இதன் பேரில் விசாரணை நடத்தப்பட்டு வந்த நிலையில் மாணவி தற்கொலை செய்யவில்லை என்றும் அவரை வாலிபர் ஒருவர் காதலித்து வந்த நிலையில்., அவர் கொலை செய்து இருக்கலாம் என்ற அதிர்ச்சி தகவலும் வெளியானது. இந்த நிலையில் மாணவியின் தாயார் தனது மகளின் குணமானது எனக்கு தெரியும் அவர் கண்டிப்பாக தற்கொலை செய்திருக்கமாட்டார்., அவருக்கு வேறு ஏதேனும் நடந்திருக்க வேண்டும் என்று புகார் அளித்தார். 

இந்த புகாரை ஏற்ற காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வந்த சூழ்நிலையில்., கல்லூரியில் பயிலும் சக மாணவர்கள் மற்றும் மாணவிகள் போராட்டத்தில் குவிக்கத் தொடங்கினார். இவர்கள் இணையதளம் மூலமாகவும் களத்தின் மூலமாகவும் போராட்டத்தில் இறங்கிய தொடர்ந்து இந்த பிரச்சனையானது இந்தியா முழுவதும் தெரிய வந்தது. 

இந்த நிலையில்., அவரது சாவுக்கு காரணமான சுதர்ஷன் யாதவ் (வயது 27) என்ற இளைஞரை கைது செய்த காவல்துறையினர்., அவனிடம் தீவிர விசாரணையை மேற்கொண்டு வந்தனர். மாணவி கற்பழித்து கொலை செய்யப்பட்டதாக பிரேத பரிசோதனையில் தகவல் வெளியான நிலையில்., இதனை மறைப்பதற்கு காவல் துறையினர் முன்வந்ததாக கூறப்பட்டது. 

மேலும்., இவருக்கு நீதி கேட்கும் வகையில் கல்லூரியில் பயின்ற மாணவர்கள் மற்றும் மாணவியர்கள் இணையத்தின் மூலமாக #justiceformadhu என்ற டேக்குகளை பதிவு செய்ய துவங்கியதை அடுத்து., இந்த விவகாரம் இந்தியா முழுவதும் தெரியவந்து., பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in karnadaga girl rapped and killed case police investigation student strike


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->