புதிய யுக்திகளை கையில் எடுக்கும் அல்-கொய்தா.! எச்சரிக்கை விடும் பிரிட்டன் அமைச்சர்.!! பீதியில் உலக நாடுகள்.!! - Seithipunal
Seithipunal


அமெரிக்காவின் தலைநகரான நியூயார்க் நகரில் உள்ள வணிக வர்த்தக மையத்தில் கடந்த 2001 ம் வருடம் விமானங்களை மோதவிட்ட அல்-கொய்தா பயங்கர வாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் 246 பொதுமக்கள் பரிதாபமாக பலியாகினர். 

மேலும்., இந்த திட்டத்தை செயல்படுத்துவதற்கு உபயோகப்படுத்திய 19 பயங்கரவாதிகளும் இந்த விமான தாக்குதலில் உயிரிழந்தனர். மேலும்., உலக வர்த்தக மையத்தின் கட்டிடங்கள் தீப்பற்றி எரிந்து தென் கோபுரம் 56 நிமிடங்களிலும்., வட கோபுரம் 102 நிமிடங்களில் முற்றிலும் சேதமடைந்தது. 

இந்த கொடூரம் சம்பவத்தில் மொத்தமாக 2973 அப்பாவி மக்கள் கொல்லப்பட்டனர்., இவர்களில் 300 பேர் வெளிநாட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த பிரச்சனைக்கு உலக நாடுகள் அனைத்தும் பீதியில் உறைந்த நிலையில் இருந்த போது அமெரிக்கா அல்-கொய்தா தலைவரை கொள்வதற்காக அதிரடியாக பாகிஸ்தானில் நுழைந்து பின்னர் ஒசாமா பின் லேடனை சுட்டுக்கொன்றனர். 

ஒசாமா பின் லேடன் இறந்த பின்னர் அல்-கொய்தவினுடைய ஆதிக்கமானது முற்றிலும் அழிந்துவிட்டதாக பேசப்பட்டாலும்., பின் லேடனுக்கு அடுத்தபடியாக இருந்த முக்கிய தளபதிகள் அனைவரும் ஐ.எஸ் அமைப்பின் மூலம் மீண்டும் தங்களின் ஆதிக்கத்தை செலுத்தி வருகின்றனர். இந்நிலையில்., பயங்கரவாத அமைப்புகள் அனைத்தையும் ஒன்று திரட்டி பெரிய அளவிலான தாக்குதலுக்கு தயாராகி வருகிறார்கள் என்று பிரிட்டன் நாட்டின் உள்துறை மந்திரி பென் வேல்ஸ் குறிப்பிட்டிருந்தார். 

அதன்படி., பிரிட்டன் நாட்டில் இருக்கும் விமான நிலையங்கள் மற்றும் விமானங்களை தாக்குவதன் மூலம் மிகப்பெரிய அழிவை ஏற்படுத்தும் பொருட்டு அவர்கள் தயாராகி வருவதாகவும்., அதற்கான ஆயுதங்களை வாங்கி குவிப்பதாகவும்., இந்த தாக்குதலுக்கு அவர்களை தயார் படுத்தியும் வருகின்றனர். 

பல புதிய வகையிலான யுக்திகளை கையாள்வதன் மூலம் ஐரோப்பிய கண்டத்தில் பறக்கும் விமானங்களை தாக்குவது குறித்த தயாரிப்பில் அல்-கொய்தா ஈடுபட்டு வருவதாகவும்., இந்த தாக்குதலை அவர்கள் இரசாயனங்கள் மூலம் மேற்கொள்ள போகின்றனர். மேலும்., இந்த தாக்குதலில் இருந்து விமானங்களை பாதுகாக்க மேற்கொண்ட ஆராய்ச்சிக்கு தர்ப்பது வரியா இரண்டரை கோடி பவுண்டுகள் செலவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.  


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in Al-Qeada terrorist introduce new Technics


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->