நீட் தேர்வில் ஜீரோ மதிப்பெண் எடுத்தவருக்கு மருத்துவ சீட்..! வெளியானது அதிர்ச்சி சம்பவம்..!! - Seithipunal
Seithipunal


மருத்துவ படிப்புகளில் சேர இந்தியா முழுவதும் உள்ள மாணவர்களுக்கு நீட் தேர்வு நடத்தப்படுகிறது. 

இந்தியாவில் உள்ள அனைத்து மாணவர்களுக்கும் மருத்துவ படிப்பில் சேர நீட் தேர்வு முறையை மத்திய அரசு  கடந்தாண்டு அறிமுகப்படுத்தியது.
   
கடந்தாண்டு முதன்முதலாக  நடத்தப்பட்ட  நீட் தேர்வில் சுழியம் மதிப்பெண்கள், நெகட்டிவ் மார்க் எடுத்த சுமார் 110 மாணவர்களுக்கு தனியார் மருத்துவ கல்லூரியில் எம்பிபிஎஸ் சீட் கிடைத்துள்ளது. இந்த சம்பவம் தற்போது வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

மருத்துவ படிப்பில் சேர,  மருத்துவ படிப்பிற்கான அறிவிப்பின்படி, இயற்பியல், வேதியியல், உயிரியியல் உள்ளிட்ட பாடங்களில் குறைந்த பட்சம் 50 சதவீத மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும். ஆனால், மருத்துவம் படிப்பதற்கான தகுதியே இல்லாத 110 மாணவர்களுக்கு , சில தனியார் மருத்துவ கல்லூரிகள்  மருத்துவம் படிக்க, மருத்துவ சீட்டை கொடுத்துள்ளது. 

இது தொடர்பாக,  டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழ் வெளியிட்ட செய்தியில்,  கடந்த 2017ஆம்  ஆண்டு நடைபெற்ற நீட் தேர்வு முடிவுகளின்படி சுமார் 400 மாணவர்கள் ஒற்றை எண் மதிப்பெண்கள் மட்டுமே பெற்று உள்ளார்கள். குறிப்பாக இயற்பியல், வேதியியல், உயிரியியல் உள்ளிட்ட பாடங்களில் கட் ஆப் மதிப்பெண்கள் கூட பெறவில்லை. மேலும் 110 மாணவர்கள் நீட் தேர்வில் ௦(ஜீரோ) மதிப்பெண்களும், நெகட்டிவ்  மதிப்பெண்களும்  பெற்றுள்ளார்கள்.

கடந்தாண்டு மருத்துவ படிப்பில் சேர்ந்த மாணவர்களின் எண்ணிக்கை, நீட் தேர்வில் அவர்கள் எடுத்த மதிப்பெண்கள் குறித்த முழுமையான விபரங்களின்படி, 1,990 மாணவர்கள் நீட் தேர்வில் 720 மதிப்பெண்களுக்கு வெறும் 150 மதிப்பெண்கள், அதற்கு கீழ் வாங்கியவர்கள் என்று கூறப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

How GOT Medical Course Admission


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->