ஜிகாதிகள் செல்லும் முன்.. நிலவில் 3 கோயில் கட்ட வேண்டும்.! சர்ச்சை கிளப்பிய இந்து மகா சபா.! - Seithipunal
Seithipunal


இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ நிலவுக்கு அனுப்பிய சந்திரயான்-3 விண்கலத்தின் விக்ரம் லேண்டரை நிலவின் தென் துருவத்தில் தரையிறக்கியது. அந்த பகுதிக்கு பிரதமர் நரேந்திர மோடி சிவசக்தி என்று பெயர் சூட்டினார். இந்த அறிவிப்புக்கு பாஜகவினர், இந்து அமைப்பினர் ஆதரவு தெரிவித்து வரும் நிலையில் எதிர்க்கட்சிகள் மற்றும் மற்ற அமைப்புகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன.

இந்த நிலையில் இந்து மகா சபா தலைவர் சுவாமி சக்ரபானி இந்த விவகாரம் தொடர்பாக கூறிய கருத்து பெரும் சர்ச்சையை கிளப்பி உள்ளது. தனியார் செய்தி நிறுவனத்துக்கு பேட்டியளித்த அவர் "ஜிகாதி மனநிலை கொண்டவர்கள் சந்திரனுக்கு செல்லும் முன்பே இந்தியாவின் சந்திரயான் இறங்கிய பகுதியை இந்து நாடாக அறிவித்து சிவசக்தி பகுதியை அதன் தலைநகரமாக அறிவிக்க வேண்டும்" எனத் தெரிவித்துள்ளார்.

மேலும் பேசிய அவர் நிலவுக்கு எளிதில் சென்று வரும் நிலைமை உருவானால் சிவன், பார்வதி, கணேஷுக்கு கோயில்கள் கட்ட நாங்கள் ஏற்கனவே தீர்மானம் நிறைவேற்றியுள்ளோம்.

நிலவுக்கு ஏற்கனவே ரஷ்யா, அமெரிக்கா, சீனா ஆகிய நாடுகள் பல விண்கலங்களை அனுப்பி இருந்தாலும் நிலவின் தென் துருவத்தில் கால் பதித்த முதல் நாடு இந்தியா தான்" என தெரிவித்துள்ளார். இந்து மகா சபா தலைவரின் இந்த கருத்து பெரும் சர்ச்சையை கிளப்பி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

HMS announced 3 temples built on moon before Jihadis go


கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->