5 மாவட்டங்களுக்கு கன மழை எச்சரிக்கை..! சென்னை வானிலை மையம் தகவல் ..!! - Seithipunal
Seithipunal


தென்மேற்கு பருவமழையின் காரணமாக கடந்த 3 மாதங்களாக கர்நாடகா, கேரளா மற்றும் தமிழ்நாட்டில் ஒரு சில பகுதிகளில் கன மழை பெய்து வருகிறது. இந்த ஆண்டு பருவ மழை முன்னதாகவே தொடங்கியது. 

இந்நிலையில்,  இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டிருக்கும் செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:-

இந்தியாவை பொறுத்தவரை உத்தரகாண்ட், மத்தியப் பிரதேசத்தின் மேற்கு மாவட்டங்கள், அருணாச்சலம், அஸ்ஸாம், மேகாலயா, நாகாலாந்து, மணிப்பூர், மிசோரம், திரிபுரா, மற்றும் கர்நாடகா, தமிழ்நாடு, கேரளா ஆகிய மாநிலங்களில் கன மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக இந்திய வானிலை மையம் எச்சச்சரித்துள்ளது.


 
இதையடுத்து,  சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டிருக்கும் செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:-  தமிழகத்தை பொறுத்தவரையில், கேரள எல்லைப் பகுதியை ஒட்டியுள்ள தேனி, திண்டுக்கல், நெல்லை, நீலகிரி, கோவை உள்ளிட்ட 5 மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. 

English Summary

Heavy Rain Chennai Meteorological Department


கருத்துக் கணிப்பு

உலக கோப்பைக்கான இந்திய கிரிக்கெட் அணி...கருத்துக் கணிப்பு

உலக கோப்பைக்கான இந்திய கிரிக்கெட் அணி...
Seithipunal