பெண்கள் போராட்டத்தின் எதிரொலி! பெண்கள் பயன்படுத்தும் அந்த பொருளுக்கு "ஜிஎஸ்டி" ரத்து!! ஜிஎஸ்டி கவுன்சில் முடிவு!!! - Seithipunal
Seithipunal


சானிடரி நாப்கின்களுக்கு தற்போது வசூலிக்கப்பட்டு வரும் 12 சதவீத வரியை ரத்து செய்ய ஜிஎஸ்டி கவுன்சில் முடிவு செய்து உள்ளது. இதனையடுத்து, சானிடரி நாப்கின்களின் விலை குறைந்துள்ளது.

நாடு முழுவதும் ஒரே சீரான வரிவிதிப்பு முறையை அமல்படுத்தும் நோக்கில் சரக்கு மற்றும் சேவை வரிவிதிப்பு "ஜிஎஸ்டி" கடந்த ஆண்டு ஜூலை 1-ம் தேதி அமலுக்கு வந்தது. காய்கறி, பழங்கள் உள்ளிட்டவற்றுக்கு வரிவிலக்கு அளிக்கப்பட்டது. பிற பொருட்களுக்கு 5%, 12%, 18%, 28% என ரகம் மற்றும் சேவை வாரியாக வரிகள் விதிக்கப்பட்டது. இதில், சானிடரி நாப்கின்களுக்கு 12% வரி விதித்துள்ளனர்.

இதற்கு மகளிரிடையே எதிர்ப்பு கிளம்பியது. பெண்களின்  அத்தியாவசியப் பொருளான "சானிடரி நாப்கின்களுக்கு" இவ்வளவு அதிகமாக வரி விதிக்கக்கூடாது என்று மகளிர் சங்கங்கள் போராட்டம் நடத்தினர். குவாலியரை சேர்ந்த மாணவிகள் சிலர் சானிடரி நாப்கின்கள் மீதான வரியை ரத்து செய்யக்கோரி பிரதமர் மோடிக்கு நாப்கினிலேயே செய்திகளை அனுப்பினார்.

இந்நிலையில், சனிக்கிழமை கூடிய ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் சானிடரி நாப்கின்கள் மீதான வரியை ரத்து செய்வது என முடிவு செய்துள்ளனர். இதையடுத்து,  சானிடரி நாப்கின்களின் விலை குறையும் என பெண்கள்  எதிர்பார்க்கின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

gst cancellation to sanitary napkins


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->