ஜிஎஸ்டி கவுன்சில் எந்தெந்த பொருட்களுக்கு வரியை குறைத்திருக்கிறது தெரியுமா? - Seithipunal
Seithipunal


டெல்லியில் இன்று நடந்த ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் அன்றாடம் மக்கள் பயன்படுத்தும் பொருட்களாக கிரைண்டர், மிக்ஸர், பிரிட்ஜ், வாஷிங்மெஷின், டிவி உள்ளிட்ட பல பொருட்களுக்கான வரியை 28 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாகக் குறைத்துள்ளது.

அதேசமயம், நீண்டநாள் கோரிக்கையான சானிட்டரி நாப்கின்களுக்கு வரிவிலக்கு அளிக்க வேண்டும் என்பதை ஏற்று வரிவிலக்கு அளிக்கப்பட்டது.

நிதி அமைச்சர் அருண் ஜேட்லிக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டு ஓய்வில் இருக்கும் நிலையில் நிதிஅமைச்சகப் பொறுப்பை பியூஸ் கோயல் கவனித்து வருகிறார். அவர் தலைமையில் டெல்லியில் இன்று ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நடந்தது.

அந்தக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட பல்வேறு முடிவுகள் குறித்து அமைச்சர் பியூஸ் கோயல் ஊடகங்களுக்கு தெரிவித்தார். அவர் பேசியதாவது:

''சானிட்டரி நாப்கின்களுக்கு 12 சதவீதம் வரிவிதிக்கப்பட்டு வந்த நிலையில் அதற்கு வரிவிலக்கு அளிக்கப்படுகிறது.மேலும், புனித ஸ்தலங்களுக்காக செய்யப்படும் மார்பில், மரங்கள், கற்கள், எந்தவிதமான விலைஉயர்ந்த கற்கள் இல்லாமல் செய்யப்படும் ராக்கி கயிறு, வீடு கூட்டும் துடைப்பத்துக்கான மூலப்பொருட்கள், முக்கியமான நினைவு நாளில் ரிசர்வ் வங்கி வெளியிடும் காசுகள், இலையால் உருவாக்கப்படும் தட்டுகள், செறிவூட்டப்பட்ட பால் ஆகியவற்றுக்கு வரிவிலக்கு அளிக்கப்படுகிறது.

கைத்தறிகள் விவசாயத்துக்கான பாஸ்பரிக் ஆசிட் ஆகியவற்றுக்கான வரி 12 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது.

லித்தியம் அயன் பேட்டரி, வாக்கூம் கிளீனர், உணவு கலக்கும் மிக்ஸர், கிரைண்டர், முகச்சவரம் செய்யும் சேவிங் மெஷின், ஹேர் கிளிப்பர், வாட்டர் ஹீட்டர், அயர்ன் பாக்ஸ், வாட்டர் கூலர், ஐஸ் கிரீம் ப்ரீசர், டிரையர், அழகுசாதனப் பொருட்கள், பெர்பியூம்கள், சென்ட், பெயின்ட், வார்னிஷ் ஆகியவற்றுக்கு விதிக்கப்பட்ட 28 சதவீத வரி 18 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது. இணையதளத்தில் படிக்கப்படும் இ-புக் வரி 18 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.

மேலும் செருப்புகளுக்கு ரூ.500 முதல் வரி விதிக்கப்பட்ட நிலையில் இப்போது ரூ.1000 முதல் 5 சதவீதம் வரி விதிக்கப்படும். டிவிகளில் 68 செ.மீ வரை இருப்பவற்றுக்கான வரி 28 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது. இந்த வரிகுறைப்பு அனைத்தும் இம்மாதம் 27-ம் தேதி முதல் நடைமுறைக்கு வரும். இவ்வாறு பியூஸ் கோயல் தெரிவித்தார்.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Sanitary napkins to be exempt from GST


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->