ஞாயிற்றுக்கிழமைக்கு பதிலாக., அந்த அரசு பள்ளியில் மட்டும் வெள்ளி கிழமை விடுமுறை! - Seithipunal
Seithipunal


பொதுவாகவே அரசு மற்றும் தனியார் பள்ளி, கல்லூரிகளில் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை அளிப்பது வழக்கம். சில கல்வி நிறுவனங்கள், சனிக்கிழமையும் விடுமுறை விடப்படும்.

இந்நிலையில், உத்தரப் பிரதேச மாநிலத்திலுள்ள பள்ளியொன்றில் ஞாயிற்றுக்கிழமைக்கு பதிலாக வெள்ளிக்கிழமைதான் விடுமுறை விடப்படுகிறது. உத்தரப்பிரதேச மாநிலம், தியோரியா மாவட்டம், நவல்பூர் கிராமத்தில் அரசு ஆரம்பப் பள்ளியொன்று இயங்கி வருகிறது. இந்தப் பள்ளியில் வார விடுமுறை நாளாக வெள்ளிக்கிழமை இருக்கிறது. அதற்கு பதிலாக அந்தப் பள்ளி ஞாயிற்றுக்கிழமை பள்ளி செயல்படும்.

அரசுப் பள்ளிக்கு வெள்ளிக்கிழமை வார விடுமுறை வழங்கப்படுவது குறித்து அறிந்த மாவட்ட ஆட்சித் தலைவர் சுஜித் குமார் வியப்பில் உள்ளார். மாநில அரசின் எந்த உத்தரவோ அல்லது வழிகாட்டுதலோ இன்றி குறிப்பிட்ட பள்ளிக்கு ஞாயிற்றுக்கிழமைக்கு பதிலாக வெள்ளிக்கிழமை விடுமுறை விடப்படுகிறது.

இத்தகைய முரண்பாடு நிகழ்ந்ததற்கு காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இந்த விவகாரம் குறித்து விசாரித்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு ஆரம்பக் கல்வி அதிகாரி சந்தோஷ் குமார் தேவ் பாண்டேவுக்கு உத்தவிட்டார்.

இதனிடையே மண்டல கல்வி அதிகாரி கியான்சந்த் மிஸ்ரா, அந்தப் பள்ளியின் முதல்வர் குர்ஷித் அகமதுவை தொடர்புகொண்டு விசாரித்துள்ளார். அப்போது, அந்தப் பள்ளியில் படிக்கும் 95% மாணவர்கள் முஸ்லிம்கள் என்பதால் வெள்ளிக்கிழமையன்று விடுமுறை அளிக்கும் நடைமுறை பின்பற்றப்படுவது கூறியுள்ளார். மேலும், மாணவர்களின் வருகைப் பதிவேடு உள்ளிட்ட அந்தப் பள்ளியின் அனைத்து ஆவணங்களும் உருது மொழியில் பராமரிக்கப்படுவதும் கூறியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

govt school instead of sunday in friday holidays


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->