இனி பேச்சுவார்த்தை போர்க்களத்தில் தான்! தாக்குதலுக்கு காம்பிர் கண்டனம்! - Seithipunal
Seithipunal


ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் பயங்கரவாதி நடத்திய தற்கொலைத் தாக்குதலில், பாதுகாப்பு படையினர் 40 பேர் வீரமரணம் அடைந்தனர். பலர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த தாக்குதலுக்கு பல்வேறு அரசியல் தலைவர்கள் மற்றும் உலக நாடுகளும் கண்டனம் தெரிவித்துள்ளது.

இந்த தாக்குதலை பிரதமர் மோடி கடுமையாக கண்டித்துள்ளார். பயங்கரவாதிகள் மிகப்பெரிய தவறு செய்துவிட்டதாகவும், அதற்கான பெரிய விலையை அவர்கள் கொடுக்க வேண்டி இருக்கும் என்றும் மோடி எச்சரிக்கைவிடுத்துள்ளார். பயங்கரவாதிகளுக்கு உரிய பதிலடி கொடுப்பதற்காக பாதுகாப்பு படைகளுக்கு முழு சுதந்திரம் கொடுக்கப்பட்டிருப்பதாகவும் அவர் கூறினார்.

மேலும், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தொடக்க ஆட்டக்காரர் கவுதம் காம்பிர், டிவிட்டர் பக்கத்தில் கண்டனம் தெரிவித்துள்ளார். அதில், இப்போது பிரிவினைவாத அமைப்புகளுடன் பேச்சுவார்த்தை நடத்தலாம், பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை நடத்தலாம். ஆனால் அந்த பேச்சுவார்த்தை போர்க்களத்தில் இருக்க வேண்டும். பொறுத்தது போதும்’ என்று காம்பிர் பதிவு செய்துள்ளார்.

இதேபோல் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் விவிஎஸ் லட்சுமண் கூறியவை, “நமது வீரர்கள் மீதான கொடூர தாக்குதலைக் கேட்டு கவலையும் வேதனையும் அடைந்தேன். நமது வீரர்கள் பலர் மரணம் அடைந்துள்ளனர். படுகாயமடைந்துள்ள வீரர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன் என்று கூறியுள்ளார்.



 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Gautam Gambhir Tweet about Pulwama attack


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->