சினிமா பணியில் காரை மறித்து காவலர்கள் தாக்கி தொழிலதிபரை மீட்ட கும்பல்! - Seithipunal
Seithipunal


சென்னை விருகம்பாக்கத்தைச் சேர்ந்தவர் மகாராஜன்(43 வயது). இவர் நிதி நிறுவனத்தை நடத்தி வருகிறார். இவரிடம் கேரள மாநிலம் பள்ளந்தட்டி பகுதியைச் சேர்ந்த ஜேக்கப் என்பவர் ரூ.45 லட்சம் கடன் வாங்கியுள்ளார். ஜேக்கப் தன்னுடைய சொகுசு காரை மகாராஜனிடம் அடமானம் வைத்து கடன் வாங்கியதாக தெரிகிறது.

சமீபத்தில் மகாராஜனிடம் வாங்கிய பணத்தை ஜேக்கப் திருப்பி கொடுத்துயிருக்கிறார். அதன் பிறகும் மகாராஜன் காரை அவருக்கு கொடுக்காமல் ஏமாற்றியதாக கூறுகின்றனர். இதுகுறித்து ஜேக்கப் அளித்த புகாரின் பேரில் எர்ணாகுளம் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.

பின்னர் எர்ணாகுளத்தில் இருந்து ஒரு சப்-இன்ஸ் பெக்டர், 3 காவலர்கள் அடங்கிய தனிப்படை நேற்று மாலை சென்னை அருகே ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் வைத்து மகாராஜனை மடக்கிப் பிடித்து கைது செய்துள்ளனர். பின்னர் மகாராஜனை கேரளாவுக்கு ஒரு காரில் அழைத்து சென்றார்கள்.

இந்நிலையில் கேரள காவலர்கள் வந்த கார் கோவை மாவட்டம் சூலூர் கருமத்தம்பட்டி அருகே உள்ள கணியூர் சோதனைச் சாவடி அருகே இரவு 11 மணிக்கு வந்து கொண்டு இருந்தது. அப்போது அங்கு தயாராக இருந்த சுமார் 30 பேர் கொண்ட கும்பல் கேரள காவலர்களை வந்த காரை சுற்றி வளைத்துள்ளனர். பின்னர் காரில் இருந்த காவலர்களை தாக்கியதோடு, ஆயுதங்களை காட்டி மிரட்டினர். அதன் பின்னர் காரில் இருந்த மகாராஜனை மீட்டு கார் தப்பிச் சென்று உள்ளனர்.

கண் இமைக்கும் நேரத்தில் நடைபெற்ற இச்சம்பவத்தால் அதிர்ச்சியடைந்த கேரள காவலர்கள், உயரதிகாரிகளை தொடர்பு கொண்டு நடந்த சம்பவத்தை தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து பாலக்காடு டி.எஸ்.பி. விஜயகுமார் தலைமையிலான கேரள காவலர்கள் குழுவினர் சம்பவ இடத்தை பார்வையிட்டனர்.

இன்று அதிகாலை இது குறித்து கோவை கருமத்தம் பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். சம்பவ இடத்துக்கு டி.எஸ்.பி. பாஸ்கர் மற்றும் காவலர்கள் விரைந்து சென்று பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டனர்.

கடத்தல் சம்பவம் நடந்ததாக கூறப்படும் கணியூர் சோதனை சாவடி பகுதியில் உள்ள கண்காணிப்பு காமிரா காட்சிகளை காவலர்கள் ஆய்வு செய்தனர்.ஆனால், அதில் கும்பல் காரில் வந்து கடத்தி சென்றதற்கான அடையாளங்கள் அதுவும் இல்லை.

இது காவல் துறைக்கு பல சந்தேகங்களை ஏற்படுத்தி உள்ளது. மகாராஜனை வேறு எங்கேயாவது விட்டு, விட்டு இங்கு வந்து புகார் கொடுக்கிறார்களா? உண்மையிலேயே கும்பல் மகாராஜனை கடத்தி சென்றிருந்தால் எந்த பாதையில் சென்றிருப்பார்கள்? என காவல் துறை தீவிர விசாரணை நடத்தி மேற்கொண்டுவருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

gang attacked the police to recover the business man


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->