கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிய கேரள ஆளுநர்! - Seithipunal
Seithipunal


கஜா புயலால் நாகை, புதுக்கோட்டை உள்ளிட்ட 12 மாவட்டங்கள் பாதிக்கப்பட்டன. இந்த பாதிப்புகளை பார்வையிட்டு, சேதங்களை மதிப்பீடு செய்வதற்காக, கடந்த  23ம் தேதி இரவு, மத்திய இணை செயலாளர் டேனியல் ரிச்சர்ட் தலைமையிலான 7 பேர் கொண்ட மத்திய குழு சென்னை வந்தனர்.

இதையடுத்து 24 ஆம் தேதி புதுக்கோட்டையில் மத்திய குழு தனது ஆய்வை முதலில் தொடங்கியது. பின் ஒவ்வொரு மாவட்டமாக ஆய்வு செய்து இன்று காரைக்காலில் ஆய்வு செய்து முடித்து.

இன்று மதியம் 2 மணி அளவில் முதல்வர் பழனிசாமி மற்றும் அதிகாரிகளை சந்தித்து, மத்திய குழு ஆலோசனை நடத்தியது. ஆலோசனை பிறகு செய்தியாளர்களை சந்தித்த த்திய இணை செயலாளர் டேனியல் ரிச்சர்ட், டெல்லி சென்ற 5 நாட்களில் புயல் பாதிப்பு பற்றிய முழு அறிக்கை மத்திய அரசிடம் தாக்கல் செய்யப்படும் என மத்திய குழு தெரிவித்துள்ளது.

இந்நிலையில், கஜா புயல் நிவாரணத்திற்கு கேரள ஆளுநர் சதாசிவம் ரூ.1 லட்சம் நிதி வழங்கியுள்ளார். இதற்கு முன்னதாக, என்எல்சி நிறுவனம் மற்றும் பணியாளர்களின் சார்பில் ரூ.6.79 கோடி நிவாரண நிதி வழங்கினார்.  அஇஅதிமுக சார்பில் ரூ.1 கோடியை துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், முதல்வரிடம் வழங்கினார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

gaja cyclone relief fund in kerala


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->