கைவிட்ட இந்திய கிரிக்கெட் வாரியம் - கனநேரத்தில் அரசியலுக்கு தாவிய பிரபல கிரிக்கெட் வீரர்..? ஆரம்பமான அரசியல் இன்னிங்க்ஸ்..! - Seithipunal
Seithipunal


இந்திய அணியின் முன்னாள் நட்சத்திர கிரிக்கெட் வீரர் கவுதம் காம்பீர் இன்று டெல்லியில் பா.ஜ.க. மூத்த தலைவர்கள் அருண்ஜெட்லி மற்றும் ரவிசங்கர் பிரசாத் முன்னிலையில் அக்கட்சியில் இணைந்தார்

முன்னாள் கிரிக்கெட் வீரர் கவுதம் காம்பீர் இன்று டெல்லியில் பா.ஜ.க.மூத்த தலைவர்கள் அருண்ஜெட்லி மற்றும் ரவிசங்கர் பிரசாத் முன்னிலையில் அக்கட்சியில் இணைந்தார்.

இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், பிரதமரின் தொலைநோக்கு பார்வையால் கவரப்பட்டு, பா.ஜ.க.வில் தம்மை இணைத்துக் கொண்டதாக குறிப்பிட்டார்.

பா.ஜ.க.வில் தம்மை இணைத்துக் கொள்ள கிடைத்த இந்த வாய்ப்பை, மிகப் பெரிய மரியாதையாக கருதுவதாகவும் கவுதம் காம்பீர் தெரிவித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து பா.ஜ.க. தலைவரை அவர் சந்தித்தார். காம்பீருக்கு பா.ஜ.க. சால்வையை, அமித்ஷா அணிவித்து கட்சிக்கு பணியாற்ற வரவேற்றார்.

இந்திய அணியில் முன்னணி வீரராக வலம் வந்த காலத்தில் தொடக்க வீரராக களம் இறங்கிய அவர் 2011-ம் ஆண்டு உலக கோப்பை இறுதிப் போட்டியில் இந்தியா வெற்றி பெற முக்கிய பங்காற்றினார்.

ஐ.பி.எல். போட்டியில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணிக்கு கேப்டனாக செயல்பட்டு கோப்பையையும் வென்று கொடுத்தார்.

கடந்த டிசம்பர் மாதம் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக காம்பீர் அறிவித்தார். தற்போது அவர் வர்ணனையாளர் பணியை செய்து வருகிறார். சமீபத்தில் கவுதம் காம்பீருக்கு பத்மஸ்ரீ விருதை மத்திய அரசு வழங்கி கவுரவித்தது குறிப்பிடத்தக்கது.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Former-Cricketer-Gautam-Gambhir-joins-Bharatiya-Janata


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->