+5 , +4 என்று தொடங்கும் எண்ணில் இருந்து அழைப்பு வந்தால்.. அழைப்பை எடுக்க வேண்டாம்..! காவல்துறை எச்சரிக்கை..!! - Seithipunal
Seithipunal



உங்களது கைபேசிக்கு  +5 மற்றும் +4 என்று தொடங்கும் எண்ணில் தொலைபேசி அழைப்பு வந்தால் அதனை எடுக்க வேண்டாம் என்று கேரளா கவத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

 அதே போல் மிஸ்டு கால் வந்தால், மீண்டும் அந்த எண்ணுக்கு அழைப்பு விடுக்க வேண்டாம் என்று கேரள காவல்துறை தெரிவித்துள்ளது. 

 +5 மற்றும் +4 ல் என்று தொடங்கும் கைபேசி எண்களில் இருந்து தங்களுக்கு அழைப்பு வந்ததாகவும், அது பொலிவியா போன்ற வெளிநாடுகளில் பயன்படுத்தும் எண்களாக இருப்பதாகவும் ஏராளமானோர் புகார் அளித்ததை அடுத்தே கேரள காவல்துறை இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது.

அதாவது உயர் தொழில்நுட்பம் கொண்ட ஒரு கைபேசியில் இருந்து உங்கள் செல்போனுக்கு அழைப்பு வரும் போது அது இணைக்கப்பட்டால் உங்கள் செல்போனில் இருக்கும் அனைத்துத் தகவல்களையும், அந்த செல்போன் மூலம் திருடும் அபாயம் இருப்பதாகக் கூறப்படுகிறது.

சிலநேரங்களில் வெளிநாட்டு எண்களை மீண்டும் அழைக்கும் போது, செல்போனில் இருக்கும் டாக்-டைம் தொகை பெரிய அளவில் குறையும் வாய்ப்பும் உள்ளது என்று காவல் துறை தெரிவித்தது. 

இதுகுறித்து விசாரணை நடைபெற்று வருவதாக கேரளா காவல்துறை தெரிவித்துள்ளது. மேலும் எந்த காரணத்துக்காக வெளிநாட்டு எண்களில்  இருந்து அழைப்புகள் விடுக்கப்படுகின்றன என்ற உண்மை கண்டறியப்படும் வரை இதுபோன்ற சர்வதேச எண்களில் இருந்து வரும் அழைப்புகளை யாரும் எடுத்துப் பேச வேண்டாம் என் கேரளா போலீஸ் அறிவுறுத்தியுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Foreign Call income and miss call not Attn


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->