#ஶ்ரீநகர் || சிறுவர்களுடன் கிரிக்கெட் விளையாடிய போலீஸ் மீது துப்பாக்கிச் சூடு.!! - Seithipunal
Seithipunal


ஜம்மு காஷ்மீர் காவல்துறை அதிகாரி ஒருவர் இன்று ஸ்ரீநகரில் பயங்கரவாதிகளால் சுடப்பட்டதில் படுங்காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதி!!

ஜம்மு காஷ்மீர் காவல்துறையில் ஆய்வாளராக பணியாற்றி வரும் மஸ்ரூர் அகமது வானி என்பவர் ஸ்ரீநகரில் உள்ள ஈத்கா மைதானத்தில் உள்ளூர் சிறுவர்களுடன் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தபோது பயங்கரவாதிகளால் சுடப்பட்டார். பலத்த காயமடைந்த மஸ்ரூர் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சொல்லப்பட்ட நிலையில் அங்கு அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருவதாகவும், அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும் தெரிய வந்துள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக காஷ்மீர் மண்டல காவல்துறை தனது எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில் "ஸ்ரீநகர் ஈத்கா அருகே இன்ஸ்பெக்டர் மஸ்ரூர் அகமது மீது தீவிரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தினர். அவர் உடனடியாக மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக மாற்றப்பட்டார். முதற்கட்ட விசாரணையில் இந்த பயங்கரவாதக் குற்றத்தில் உபயோகப்படுத்தப்படும் துப்பாக்கி இந்த தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்டது தெரியவந்துள்ளது. வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது" என பதிவிடப்பட்டுள்ளது.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Firing on police who played cricket with children in Srinagar


கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->