சிகிச்சை அளித்த "இளம்பெண் மருத்துவர்"... கத்திரிக்கோலால் குத்திக்கொன்ற "போதை ஆசிரியர்"..! கேரளாவில் பரபரப்பு..! - Seithipunal
Seithipunal


கேரள மாநிலத்தில் மருத்துவமனையில் சிகிச்சை அளித்த பெண் மருத்துவரை போதை ஆசிரியர் கத்திரிக்கோலால் குத்திக்கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கேரள மாநிலம் பியூப்பள்ளி பகுதியை சேர்ந்தவர் சந்தீப். ஆசிரியராக பணியாற்றி வந்த சந்தீப் போதை மருந்துக்கு அடிமையாகி அடிக்கடி வீட்டில் தகராறு செய்து வந்துள்ளார். இதையடுத்து போதையில் சந்தீப் நேற்றும் தகராறு செய்துள்ளார். இதில் தகராறு முற்றிய நிலையில், குடும்பத்தினர் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் மற்றும் குடும்பத்தினர், பிரச்சனையில் சந்தீப்புக்கு காலில் காயம் ஏற்பட்டதால் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்து வந்துள்ளனர். அப்பொழுது சந்தீப் மருத்துவமனையிலும் ரகலையில் ஈடுபட்டுள்ளார். இதில் கத்திரிக்கோலை எடுத்து சிகிச்சை அளிக்க வந்த மருத்துவர் வந்தனா தாஸ் (23) உட்பட அங்கிருந்த போலீசாரை தாக்கியுள்ளார்.

இதில் 5 பேர் படுகாயம் அடைந்த நிலையில், ஐந்து இடங்களில் கத்தரிகோலால் குத்தப்பட்ட மருத்துவர் வந்தனா தாஸ், சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். மேலும் நான்கு போலீசார் காயம் அடைந்தனர். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Female doctor stabbed to murder the drug teacher with scissor in kerala


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->