விழி பிதுங்கும் அரசியல் கட்சிகள்.. தேர்தலை முன்னிட்டு பேஸ்புக் கொண்டுவந்த அதிரடி மாற்றம்..? ஜாதகம் எல்லாம் புட்டு புட்டு வைக்கப்படுகிறது.! - Seithipunal
Seithipunal


தேர்தல் நேரத்தில் சமூக வலைதளத்தில் தேர்தல் மற்றும் அரசியல் கட்சிகள் தொடர்பான விளம்பரங்கள், பிரச்சாரங்கள் பரப்பப்படுவதை அந்நிறுவனம் கைவிட வேண்டும் என பேஸ்புக் நிறுவனத்திற்கு இந்திய தேர்தல் ஆணையம் கோரிக்கை விடுத்துள்ளது.

தேர்தலுக்கு 48 மணிநேரத்திற்கு முன்னதாகவே தேர்தல் தொடர்பான விளம்பரங்களை ரத்து செய்ய வேண்டும் என இந்திய தேர்தல் ஆணையம் முகநூல் நிறுவனத்திற்கு கோரிக்கை வைத்திருந்தது.

ஆனால் அந்த கோரிக்கைக்கு இதுவரை பதிலளிக்காமல் இருந்த முகநூல் நிறுவனம் தற்போது அதுகுறித்து பரிசீலித்து வருவதாக அந்நிறுவனம் கூறியுள்ளது.

இதுகுறித்து பேசியுள்ள பேஸ்புக் நிறுவனத்தின் பிரதிநிதி ஸ்னோஹாஸிஸ், பேஸ்புக்கில் தேர்தல் சட்டங்கள் மீறப்பட்டால் அதை புகாராக தெரிவிக்க சிறப்பு வசதி செய்து தரப்படும் எனவும், அப்படியும் மீறி தேர்தல் விளம்பரங்கள் மற்றும் பிரச்சார விதிமீறல்கள் நடைபெற்றால் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில்,  அடுத்த ஆண்டு இந்தியாவில்  பொதுத்தேர்தலல் நடைபெற உள்ளதால், அதிரடி மாற்றங்களை செய்ய உள்ளதாக பேஸ்புக் நிறுவனம் கூறியுள்ளது.

இதுகுறித்து அந்த நிறுவனம் விடுத்துள்ள செய்தி குறிப்பில், பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் வலைதளங்களில் அரசியல் விளம்பரங்களை பதிவிட விரும்புவோர் அடையாளம் மற்றும் இருப்பிடம் சார்ந்த விவரங்களை உறுதிப்படுத்த வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

இதற்காக அடையாளச் சான்று, இருப்பிடச் சான்றை சமர்பிக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அரசியல் விளம்பரங்களை பதிவிடுபவர் பற்றிய விவரங்கள் விளம்பரங்களில் தெரியும் என்றும், தேடும் வசதி கொண்ட விளம்பர மையம் அமைக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

விளம்பரத்திற்கும் செலவிடப்பட்ட தொகை, எத்தனை பேர் பார்த்து உள்ளனர் என்ற விவரங்களை மையத்தில் பார்க்க முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

facebook rules restricted officially


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->