சீக்கிரமா எல்லோரும் 15 குழந்தைகளுக்கு மேல பெற்றுக்கொள்ளுங்கள்..! நிச்சயம் பரிசு உண்டு,,!! இந்தியாவில் இப்படி ஒரு அறிவிப்பை வெளியிட்ட மாநிலம்..!!! - Seithipunal
Seithipunal


இந்தியாவின் மிசோரம் மாநிலத்தில் மக்கள் தொகை குறைந்து வருவதை அடுத்து, அம்மாநில அமைப்புகள், அம்மாநில மக்களுக்கு ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில் அனைவரும் 15 குழந்தைகளுக்கு மேல் பெற்றுக்கொள்ளுங்கள் என்று அறிவித்துள்ளனர்.

அம்மாநிலத்தில், மக்கள் தொகை குறைவாக உள்ள காரணத்தால், வெளிமாநிலத்தவர்கள் அதிக அளவில் குடியேறி வருவதாக புகார் எழுந்துள்ளது. இதனால் அம்மாநிலத்தின் சில அமைப்புகள், தம்பதிகள் குறைந்தது 15 குழந்தைகளை பெற்றுக்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தி வருகின்றனர்.

நம் இந்தியா நாட்டில் மக்கள் தொகை மிக குறைவாக உள்ள இரண்டாவது மாநிலம் மிசோரம் மாநிலம் ஆகும். இம்மாநிலத்தில் ஒரு சதுர கிலோ மீட்டருக்கு வெறும் 52 பேர் மட்டுமே வாழ்ந்து வருகின்றனர். இதனை பயன்படுத்தி வெளிமாநிலத்தவர்கள் அங்கு ஆயிரக்கணக்கில் குடிபெயர்ந்து வருகின்றனர்.

இதனால் சொந்த மாநில மக்களின் நலன்கள் பாதிக்கப்படுவதாக கூறி, அங்குள்ள அமைப்புகள் மிசோரம் மக்களை அதிகளவு குழந்தைகளை பெற்றுக்கொள்ள வலியுறுத்தி வருகின்றன. ஒரு தம்பதியினர் குறைந்தது 15 குழந்தைகளாவது பெற்றுக்கொள்ள வேண்டும் என்றும், அவ்வாறு செய்தால் தான் சொந்த மாநிலத்தவரின் மக்கள் தொகை அதிகரிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்காகத்தான் எங்கள் பெண்களை அதிக குழந்தைகள் பெற்றுக்கொள்ளும்படி ஊக்குவிக்கிறோம் என்றும் மிசோரமை சேர்ந்த அமைப்புகள் விளக்கமளித்துள்ளன.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

every husband and wife born 15 child new order


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->