ரெயில் மோதி படுகாயமடைந்த யானை - ஓட்டுநர் மீது வழக்குப்பதிவு.! - Seithipunal
Seithipunal


கேரள மாநிலத்தில் பாலக்காடு மாவட்டம் கோட்டேக்காடு ரெயில் நிலையம் அருகே வனப்பகுதியில் காயமடைந்த நிலையில் யானை ஒன்று கிடப்பதாக வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, வனத்துறை அதிகாரிகள் நேரில் சென்று சோதனை நடத்தினர்.

காயமடைந்த யானையால் நகர முடியாததால், அருகில் உள்ள யானைகள் முகாமில் இருந்து உணவு, மருத்துவ உதவிகள் ஆகியவை வரவழைக்கப்பட்டு யானைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றனர். 

இந்த சம்பவம் குறித்து வனத்துறையினர் தெரிவிக்கையில், "யானையின் பின்னங்கால்களில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளதாகவும், யானையால் எழுந்து நிற்க முடியாமல் இரண்டு நாட்களாக அதே இடத்தில் கிடந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். 

மேலும், அந்த யானை ரெயிலில் மோதி படுகாயம் அடைந்திருக்கலாம் என்றும் சந்தேகித்து அடையாளம் தெரியாத என்ஜின் டிரைவர் மீது வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளதாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

elephant injured train accident in kerala


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->