48 மணிநேர நடவடிக்கை - தேர்தல் ஆணையம் போட்ட கிடுக்கிப்பிடி..? கலக்கத்தில் அரசியல் கட்சியினர்..! - Seithipunal
Seithipunal


தேர்தல் வாக்குப்பதிவு நாளுக்கு 48 மணிநேரத்துக்கு முன் அரசியல் கட்சிகள் தேர்தல் அறிக்கையை வெளியிடக்கூடாது என்று தேர்தல் ஆணையம் திடீர் உத்தரவு பிறப்பித்துள்ளது.

தேர்தல் ஆணையம் கடந்த ஜனவரி 22 மற்றும் பிப்ரவரி 9-ம் தேதிகளில் தேசிய மற்றும் மாநில கட்சிகளுக்கு எழுதிய கடிதத்தில், தேர்தல் அறிக்கையை வெளியிடும் காலக்கெடு குறித்த விவரங்களை தெரிவித்திருந்தது. அதை இப்போது செயல்படுத்தி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து தேர்தல் ஆணையம் வெளியிட்ட அறிவிப்பில்,

அரசியல் கட்சிகளிடம் இருந்து ஆலோசனைகள் , கருத்துக்கள் பெறப்பட்டதன் அடிப்படையில் தேர்தல் ஆணையம் தேர்தல் நடத்தை விதிமுறை 4-ம் பத்தியில் குறிப்பிட்டுள்ளபடி, வாக்குப்பதிவு நாளுக்கு 48 மணிநேரத்துக்கு முன் எந்த அரசியல் கட்சிகளும் தேர்தல் அறிக்கையை வெளியிட தடை விதிக்கப்படுகிறது.

மக்கள் பிரதிநிதித்துவச்சட்டம் 126-ன்படி, இந்த தடைக்காலத்தில் எந்த கட்சிகளும் தங்களின் தேர்தல் அறிக்கையை வெளியிடக்கூடாது . இந்த தடைக்காலம் என்பது மக்கள் அமைதியான மனநிலையில் இருந்து முடிவு எடுக்க நேரம் ஒதுக்கப்படும் காலம் ஆகும்.

பல்வேறு கட்டங்களாக தேர்தல் நடக்கும் மாநிலங்களிலும் இந்த 48 மணிநேர காலவிதிமுறை என்பது பின்பற்றப்படும். இந்த 48மணிநேரத்தில் எங்கு தேர்தல் நடக்கிறதோ அங்கு மட்டும் இந்த விதிமுறை நடைமுறைக்கு வரும். அதேசமயம், ஒரு மாநிலத்தில் ஒரு சில மாவட்டங்களில் வாக்குப்பதிவு இல்லாத நிலையில், அங்கு இது நடைமுறைக்கு வராது.

இந்த 48 மணிநேரத்தில் அரசியல் கட்சிகள் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ வாக்காளர்கள் மீது அரசியல் கட்சிகள் தாக்கத்தை ஏற்படுத்த முடியாது. இந்த தடைக்காலத்தில் அரசியல் கட்சிகளுக்கு பிரச்சாரம் செய்துவரும் சினிமா நடிகைகள், நடிகர்கள், நட்சத்திர பிரச்சாரகர்கள், அரசியல் தலைவர்கள் யாரும் ஊடகங்களுக்கு பேட்டி அளிக்கவோ, பத்திரிகையாளர் சந்திப்பு நடத்தவோ, நேர்காணல் அளிக்கவும் தடைவிதிக்கப்படுகிறது ' என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

election commission india


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->